தேவதையின் மகள் புகைப்படம் பார்த்து எழுதிய கவிதை
தேவதையின் மகளோ
தேனிலவின் உறவோ
பால்முகம் ததும்பும்
பச்சிளம் குழந்தையிவள்..!
இவள் பார்க்கிறாளா
இல்லை பேசுகிறாளா
இரண்டும் செய்கிறதே
இவள் கண்கள்..!
இமையால் மொழிபேசி
இதயத்தை கவருகிறாள்
இறைவன் தந்த வரமோ
இவளுக்கு மட்டும் தனித்துவம்..!
ஈரிதழ் மலராய்
இனிப்பான உதடு
இரை தேடும் தேனிக்கு
இதை சொல்லிட வேண்டாம்..!
கழுத்திலுள்ள முத்துமாலையின்
கர்வத்தை அழிக்கின்றது
பற்பசை படாத - இவளின்
பளிச்சிடும் பற்கள்..!
வென்பஞ்சு மேகங்களே
வெந்நீரில் வேக வைத்து
பிஞ்சு கண்ணங்களாக
பிரம்மன் செய்திருப்பானோ..!
ஆராய்ச்சி தொடர்கிறது
ஆழ்மனதில் இன்னும்..!
பார்க்கும் போதெல்லாம்
பஞ்சுமிட்டாயாக தெரிகிறது
இவள் வண்ணமோ
இவள் ஆடை வண்ணமோ
பிரித்து பார்க்க முடியவில்லை
பிழையுள்ள என் கண்களால்..!
பொம்மை பூனைக்கு
பொழுதுபோக்காக இவள் விரல்
இவள் விரல் படும் நேரத்திலே
உயிர் பெறுகிறது அந்த பொம்மை..!
செடியிலும் பூக்கவில்லை
கொடியிலும் பூக்கவில்லை
இவள் தலையில்
இருக்கும் காரணமோ
மகிழ்ச்சியாக மணக்கிறது
துணியால் செய்த
அந்த மலர்..!
நானும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்...
தாமதமாக நான் பிறந்திருந்தாலோ...
அல்ல
வேகமாக இவள் பிறந்திருந்தாலோ...
காலம் கனிவு காட்டததால்
காதலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது..!
கடவுள் அடுத்த ஜென்மத்தில்
கருணை காட்டாட்டும் எங்களுக்கு..!
கடவுள் அடுத்த ஜென்மத்தில்
கருணை காட்டாட்டும் எங்களுக்கு..!!!