நினைவும் துணிவும்

காதலை அரைத்து
உள்இதயத்தில் பத்துப்போட்டான்
உயிருள்ளவரை அழியாமல்
உடனிருக்க அழுத்திப்போட்டான்

காய்ந்த கொத்தமல்லியாக
மனதைப் பொடினாக்கினான்
உடுத்தும் உடைகளை
உலரவைக்கும் கொடியாக்கினான்

வழக்கம்போல் என்னழகை
கவிதையாக வர்ணித்துப்போனான்
இருவரும் சந்தகக்கும்வேளை
அவனுலகம் அழைத்துப்போனான்

உரலுக்குள் தானியமாக
வயதை தவிக்கவைத்தான்
தினமும் அவனையேஎண்ணி
இளமையை திக்கமுக்காடவைத்தான்

காலையிலும் மாலையிலும்
அவனது நினைவுதான்
அவனையே கரம்பிடிக்க
எனக்குவேண்டும் துணிவுதான் !..

எழுதியவர் : ...ராஜேஷ்... (16-Dec-17, 10:55 am)
பார்வை : 101

மேலே