எண்ணமும் ஒளிர்கிறது

---------------------------------------
தூரிகையோ ஒன்று
காரிகையர் மூன்று
நீர்க்குடம் ஒன்று
சுமப்பவர் மூன்று !
ஓவியத்தில் கற்பனை
ஓவியனின் சாதனை
அஃறிணை ஒருமை
உயர்திணை பன்மை !
கலையுணர்வும் புரிகிறது
கைத்திறனும் தெரிகிறது
எண்ணமும் ஒளிர்கிறது
வண்ணமும் மிளிர்கிறது !
வாழ்த்துகள் ஓவியருக்கு !
பழனி குமா