நீ
உன் உள்ளங்கையை தலையணை ஆக்க
ஆசை படுகிறது என்
கன்னம்.
உன் குழலை கோதி விளையாட
ஆசை படுகிறது என்
விரல்கள்.
உன் கன்னத்தை ருசி பார்க்க
ஆசை படுகிறது என்
இதழ்கள்.
உன் இதழில் சிரிப்பை பார்க்க
ஆசை படுகிறது என்
கண்கள்.
உன் சுவாச ஒளியை கேட்க
ஆசை படுகிறது என்
செவிகள்.
உன்னை என்றும் குடி வைக்க
ஆசை படுகிறது என்
இதயம்.
உன் கண்ணை வரணித்து சொல்ல
வார்த்தை இல்லை என்னிடம்
காரணம்.
இக்கவி நீ பாக்க மட்டுமல்ல
இதை உன் இதயம்
உணர.