தேனீக்கும் மலருக்கும் காதல்
மலரே உன் முகவரித் தேடி
அலைந்து நானும் திரிந்தேனே
மணக்கும் உன் வாசம் நுகர்ந்து
மயங்கி நானும் வந்தேனே
வருக வருக என்று சொல்கிறாய்
பருக பருக தேனைத் தருகிறாய்
உருக உருக உன்னையே தருகிறாய்
உன் இதழ்களாலே இறுக்கி அனைக்கிறாய்
காற்றில் உந்தன் அசையும் சத்தம்
என் காதில் வந்து விழும் நித்தம்
உன்னிடம் கேட்க வந்தேன் முத்தம்
உடனே செய்கிறாய் காதல் யுத்தம்
பூக்களில் உன்போல் யாரும் இல்லை
பூமியில் நீதான் அழகுப் பிள்ளை
காதலில் நமக்கு ஏது எல்லை
கனிவாய் எனக்கு தருவாய் தொல்லை
வண்ணப் பூவே நீ வருவாயா
வரம் ஒன்று எனக்குத் தருவாயா
கடைசிவரை நான் உன்னுடன் வாழ
காத்திருக்கேன், பதில் சொல்வாயா !