முத்துக்கள் சிரிக்கும் புன்னகைப் புத்தகம் நீ

நிலவு நீ
நிலவு நீரோடையில்
நீந்தும் கயல்கள் நீ !

நினைவு நீ
நெஞ்சின் நினைவலைகளில்
கொஞ்சும் காதல் நீ !

பார்க்கும் விழி நீ
பழகும் தமிழ் நீ பழகும் தமிழில்
அமுதம் தரும் கவிதை நீ !

நெஞ்சம் நீ
நெஞ்சின் அலைககளில் தவழ்ந்து வரும்
நேசக் காதல் தீபம் நீ !

வானம் நீ
வானவில் நீ வானவில் நிறங்கள் தோற்கும்
மேனி எழில் நீ !

செம்பவள இதழ்கள் நீ
பவள இதழ்களில் உருளும் முத்துக்கள் நீ
முத்துக்கள் சிரிக்கும் புன்னகைப் புத்தகம் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-17, 11:36 am)
பார்வை : 122

மேலே