பொருத்தம்
பிறக்கும் போது எனக்கு பொருத்தம் பார்த்ததில்லை!
..
பள்ளிகூடம் செல்லும் போது எந்த பொருத்தமும் பார்த்து சேர்வதில்லை!
..
கல்லூரி பருவத்தில் எந்த பொருத்தமும் இல்லாத துறையில் பயின்றேன்!
..
வயிற்று பிழைப்பிற்காக தகுதிக்கு பொருத்தம் இல்லாத வேலையில் அமர்ந்தேன்!
..
நண்பர்கள் எல்லோரும் ஒருவருவருக்கொருவர் பொருத்தம் இல்லாத நட்புகளாக இருந்தோம்!
..
ஏனோ தெரியவில்லை திருமணம் என்ற வியாபாரத்திற்கு பொருத்தம் வேண்டும் என சொல்கின்றார்கள்!
..
காரணம் என்ன வென்று சிந்தித்து பார்க்கையில் மணக்கோலம் சென்றவனுக்கு...!
..
ஆயிரம் காலத்து பயிர்களாக விவசாயம் சிறக்க!
..
சித்தர்கள் சொன்ன ஓர் தாரக மந்திரமே பொருத்தம்!
..
- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்