விட்டு விடாதே

சிந்திக்காத செயல்களில் மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
சட்டென்று வீசிவிட்ட வார்த்தைகளின் வலியால் மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
விரல்கள் எழுதிய மரியாதை குறைவான வரிகளை வாசித்த மனம் காயம் - போனது போகட்டும் விட்டு விடு!
..
வாழ்க்கை என்றால் நல்லதும்! கெட்டதும்! எதிர் எதிர் அணிகள் இதில் யார் தோல்வி அடைந்தாலும் - போனது போகட்டும் விட்டு விடு!
..
நீ எடுக்கும் முயற்சியில் மனம் எத்தனை காயங்கள் ஆனாலும் உனது குறிகோள்களை போனால் போகட்டும் என விட்டு விடாதே!
..

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (19-Dec-17, 10:15 pm)
Tanglish : ponathu pogattum
பார்வை : 258

மேலே