மனசு என்ன கரும்பலகையா
மனசு என்ன கரும்பலகையா
அழித்து எழுதிட
காதல் என்ன வியாபாரமா
விற்று லாபம் பார்க்க...
அன்னை மடியாக என் இதயம்
உன் மடியை தேடுது
உனை காணாமல் அது
சுவாசிக்கவும் மறுக்குது...
உன் நினைவு என்ன வெறும்
கனவா கலைந்துப்போக
இது வெறும் முகம் பார்த்த காதலா மறந்துப்போக
அகம் பார்த்த காதல் மறக்காதே...
இப்பிறவியில் உன் மடிசயாமல்
என் உயிர் போனாலும்
இன்னொரு ஜென்மத்திலும்
உன்னையே தேடி சுற்றும்....