கன்னத்தைக் கிழித்த கால்வாய்கள்

மேகங்கள் முகட்டில் முட்டி
மழைபெய்து நதியாய் மாறி
வேகமாய் பெருக் கெடுத்து
மலைச்சரிவின் மேனியில் ஓடி
அருவியாய்க் கொட்டும் போது
அரித்தெடுத்த கணவாய் போல
மனமெனும் முகட்டில் சோக
மேகங்கள் முட்டி மோதி கண்ணீராய் மாறிப் பின்னே கண்களில் குளமாய் நிரம்பி கன்னத்தில் வழிந்து கால்வாய்ச் சின்னங்கள் பதித்த முகமோ?