அவன் கருவிழி

அடுத்த வரி கவி என்னென்று தெரியவில்லை
அவனிருவிழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்

பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
அவன் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்

கனவிலும் காமம் படர்கிறது
சரியாக இடம் அமைந்தும்
சாதிக்க மறுப்பவன்
சிறிதாக என் பெண்மையை சீண்டிப் பார்க்கிறான்

அடுத்தொரு தனிமையில்
பொறுமை என் யாசிப்பல்ல
மார்கழியில் வேண்டாம் உன் இருவிழி
சீக்கிரமாய் தை பிறக்கும்.!

எழுதியவர் : வான்மதி கோபால் (20-Dec-17, 12:33 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : avan karuvili
பார்வை : 533

மேலே