கலாம்
கலாம்
தேசத்தின் அணையா ஔியே
வேஷங்கள் பல கொண்ட அணியே
ஞாலங்கள் என்றும் உந்தன் அறிவிலே
எங்கள் ஞானங்கள் வளர்க்க என்றும் அது உதவுமே
கனவுகள் என்றும் உந்தன் மொழியிலே
எங்கள் கனவுகள் யாவிலும் உந்தன் முகமே
பாதைகள் யாவும் உந்தன் பெயரிலே
எங்கள் பாதைகள் யாவும் உந்தன் வழியிலே
காலங்கள் கழித்து உந்தன் கடைவிழியை மூடினாய்
காலங்கள் கடந்தும் உந்தன் கருத்துகளை உயிரூட்டினாய் .........
- சஜூ