முன்னும் பின்னும் வாழ்கை

இயற்கை எதற்கடி கொடுத்தான் இறைவன்
அதில் இன்பம் எதற்கடி கொடுத்தான் இறைவன் ,,,,

இரு கண்கள் எதற்கடி கொடுத்தான் இறைவன்
அதில் அமைதிக் காதல் எதற்கடி கொடுத்தான் இறைவன் ,,,,

முத்தம் எதற்கடி படைத்தான் இறைவன்
அதில் சத்தம் எதற்கடி படைத்தான் இறைவன்

என் முத்தம் கூட ஏற்கா உன்னை
எதற்கடி அருகினில் படைத்தான் இறைவன் ,,,,,

எங்கோ எதிலோ இருக்கான் இறைவன்
எல்லாம் நிகழ்த்தும் மாய கயவன் ,,,,,

கெட்ட எண்ணம் நிகழா வண்ணம்
மாயம் செய்யும் அவனே அன்பன் ,,,,,

குயில் ஓசை கேட்கும் காலை போல
மயில் தொகை விரிக்கும் மாலை அழகு ,,,,

பகலில் மிளிரும் சூரியன் போல
இரவில் ஒளிரும் சந்திரன் அழகு ,,,,,,

அன்பைக் கொட்டும் அன்னை போல
அறிவைக் கொட்டும் தந்தை அழகு ,,,,,

தலையைக் கொட்டும் அண்ணன் போல
கன்னம் கிள்ளும் தங்கை அழகு ,,,,,,

பற்கள் விழுந்த பாட்டி போல
சொற்கள் புதைந்த தாத்தா அழகு ,,,,,

இவை யாவும் கிடைக்க வாழ்கை அழகு ,,,,,

இயற்கை எதற்கடி கொடுத்தான் இறைவன்
அதில் இன்பம் எதற்கடி கொடுத்தான் இறைவன் ,,,,

வறுமை எதற்கடி கொடுத்தான் இறைவன்
உலகில் வஞ்சம் எதற்கடி படைத்தான் இறைவன் ,,,,,

ஏழை வீட்டில் சோறு இல்லையே
உயர் சோற்று வீட்டில் சேவை இல்லையே ,,,,,,

நாட்டு மாட்டின் நன்மை குறையலே
வெளி நட்டு மாட்டின் வருகை குறையலே ,,,,,,

வெச்ச பயிறு வீடு திரும்பல
நட்ட காசுக்கு நட்டம் தீரல ,,,,,

கயவர் கூட்டம் நாடு தாண்டல
குறவர் கூட்டம் வீடு தீண்டல ,,,

இதனால் இதனால் இறைவா பதில் சொல் ,,,,

அழகிய வாழ்கை முற்றுப் பெறுமா
அனைத்தும் நிகழாமல் வாழ்கை வருமா ,,,?

எழுதியவர் : பா.தமிழரசன் (22-Dec-17, 1:16 pm)
சேர்த்தது : தமிழரசன் பாபு
பார்வை : 206

மேலே