வித்தியா தேவி

வித்தைகள் அருளும் வித்தியா தேவி!
வியன்மலர்ப் பாதங்கள் பணிந்தேன்!
புத்தியில் தெளிவும், பூரண நலமும்,
புகழ்தரு வெற்றியும் அருள்வாய்!
சத்தியம் எனது கவிதையில் வாக்கில்
சந்ததம் ஒலித்திடச் செய்தே,
இத்தரை மாந்தர் ஏற்றமும் பொலிவும்
இன்பமும் அடைந்திடச் செய்வாய்!

எழுதியவர் : கௌடில்யன் (22-Dec-17, 2:14 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 99

மேலே