தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி
கண் விழித்த அசோக்கின் வாயிலிருந்து, " நான் யார்? எதனால் இப்படி இருக்கிறேன்? ", என்ற தனித்தமிழ் சொற்கள் வெளிப்பட கேட்ட வைத்தியருக்குப் புரியாமல், அந்தக் கிராமத்திலேயே படித்த பெண்ணாகிய அதீஃபாவை அழைத்து வரச் சொன்னார்.
வந்த பெண் அசோக் பேசுவதைக் கேட்டுவிட்டு, " நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆங்கிலத்தில் கூறுங்கள். ", ஆங்கிலத்திலே கூறிடக் கேட்ட அசோக், " நான் யார்? எப்படி இங்கு வந்தேன்? எனக்கு என்ன நடந்தது? ",என்று ஆங்கிலத்தில் கேட்டான்..
அதைக் கேட்ட அதீஃபா, " உங்களுக்கு எதுவும் ஞாபகமில்லையா? ", என்றிட, " எதுவுமே தெரியவில்லையே. ", என்று அசோக் மிகப் பரிதாபமாக விழித்தான்..
" இவனுக்கு நடந்தது எதுவுமே ஞாபகத்தில் இல்லை. ", வைத்தியரிடம் பஞ்சாபியில் அதீஃபா சொல்ல, வைத்தியர் அசோக்கின் தலையை பரிசோதனை செய்தார்.
வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை.
இவனுக்கு பயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஞாபகம் மறந்திருக்க வேண்டுமென்று யூகித்துக் கொண்ட வைத்தியர், " அவனால் எழுந்து நிற்க முடியுமா? ", என்று அவனிடம் கேட்க பஞ்சாபியில் அதீஃபாவிடம் சொல்ல, " உங்களால் எழுந்து நிற்க இயலுமா? ",என்று அதீஃபா ஆங்கிலத்தில் கேட்டார்.
" முயற்சிக்கிறேன். ", என்ற அசோக் எழுந்து நிற்க காலில் வலி எடுக்க தவறி கீழே விழ
தன் உடை அவிழ்ந்துவிழக் கண்டவர் தன் கைகளால் அதை விரைந்து பிடிப்பாற் போல் தாங்கி பிடித்தார் வைத்தியர்.
காலில் ஏதோ எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று உணர்ந்த வைத்தியர், கீழே ஊன்ற இயலாத காலுக்கு முறிந்த எலும்பு ஊற மட்டை வைத்துக் கட்டிவிட்டு மறு காலில் எற்பட்ட சிறு காயங்களுக்கு மருந்திட்டு உடல் தேற நல்ல உணவுகளையும் கொடுத்தார்.
உண்டு தெளிந்தவன் உறக்கினான்.
தினமும் அதீஃபாவிடம் சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதோடு சரி,
வேறு பேச்சுகள் இல்லை.
உணவு சாப்பிட்டு உடல்நிலை தேறினான்.
உடல் காயங்கள் உலர்ந்தன.
காலும் சற்று தேறிவரக் எழுந்து அமர்ந்திருந்தான் அசோக்.
அவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைகிறானென்று வைத்தியர் சந்தோஷமடைந்தார்.
ஒருநாள் வைத்தியர் அஹ்மத் தொழுகை செய்து கொண்டிருந்தார்.
அசோக் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, வந்த அதீஃபாவிடம், " அவர் என்ன செய்கிறார்? ", என்று வினாவ, " அவர் தொழுகை செய்கிறார். ", என்றாள் ஆங்கிலத்தில்.
" தொழுகையென்றால்? ",என்றிட, " கடவுள் வழிபாடு. தொழுகை செய்வதால் நமது கெட்ட எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை எழுப்பி, சோர்வு நீக்கி, உற்சாகம் பொங்க அல்லாஹ் கிருபை செய்வார். ", என்றாள் அதீஃபா.
" அப்படியென்றால் நானும் தொழுகை செய்யலாமா? ", என்று அசோக் கேட்க, " ஆம். செய்யலாம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் செய்யலாம். ",என்று ஆங்கிலத்தில் கூறினாள் அதீஃபா.
அதற்குள் தொழுகை முடிந்து வந்தார் வைத்தியர் அஹ்மத்.
அவரிடம் அதீஃபா, " இவரும் தொழுகை செய்ய விரும்புகிறார். ", என்றிட, அசோக்கைப் பார்த்துப் புன்னகைத்த வைத்தியர், அதீஃபாவிடம், " திருக்குர்ஆனின் ஆங்கிலப் பதிப்பு இருந்தால் அதை இவரிடம் கொண்டுவந்து கொடு. ",என்று பஞ்சாபியில் கூறினார்.
அதீஃபாவும் திருக்குர்ஆன் ஆங்கிலப் பதிப்பைக் கொண்டு வந்து அசோக்கிடம் கொடுத்தாள்.
வைத்தியர் தொழுகை முறையைக் கற்பித்தார்.
தெரிந்து கொண்ட அசோக் தன்னால் முடிந்த அளவு தொழுகை செய்தான்.
காலில் கட்டுப் போடப்பட்டு இருந்ததால் மடக்க முடியவில்லை.
இருந்தாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையால் தொழுகை செய்து வந்தான்.
இப்படி நாட்கள் நகர, பாகிஸ்தானிய இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வைத்தியரின் மகன் அமான் தன் மனைவி மக்களோடு வைத்தியர் வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்க வந்திருந்தார்.
வந்தவருக்கு புதியதாக தென்பட்ட அசோக்கின் மீது சந்தேகம்.
ஆதலால் தன் தந்தையை தனியே அழைத்து அந்த இளைஞனைப் பற்றி வினாவ, அதற்கு வைத்தியர், " இந்த இளைஞர் ஆற்றங்கரை ஓரத்தில் கிடைக்கப்பெற்றான். அதீஃபா தான் கண்டு வந்து சொன்னாள்.
உடலில் துப்பாக்கிக் குண்டுகளால் காயம்பட்டிருந்த இவன் ஒரு இந்திய இராணுவ வீர உடையில் இருந்தான். ",என்றார்..
" இவன் இந்தியாவைச் சேர்ந்தவனென்றால் இவனை இங்கு வைத்திருப்பதே குற்றம். நீங்கள் இவன் உயிர் காக்க மருத்துவம் செய்திருக்கிறீர்கள் ", என்று அமான் தேசபக்தியோடு பேசிட, வைத்தியர், " இவன் தான் யாரென்பதை மறந்த நிலையில் இங்கு வந்தான். துன்பத்தில் இருப்பவரின் துன்பத்தைத் துடைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் ஆட்சி அகிலமெங்கும் நடக்க, அல்லாஹ்வின் படைப்பில் உயிர்களெல்லாம் சகோதரத்துவ உரிமை இயற்கையாய் பெற்றிருக்க, அடுத்த நாட்டவன் என்று இவனை ஒதுக்கிவிடலாமா? சகோதரன் ஒருவன் துன்பப்படக் கண்டு நாம் இன்புற்றால் அல்லாஹ் நம்மை மன்னிக்கவே மாட்டார். ",என்றார் பஞ்சாபி மொழியில்.
தன் தந்தையின் சொற்கள் சத்தியமென்பதை உணர்ந்த அமானுக்கு,
அசோக்கின் மீது பரிவு ஏற்பட்டது.
இருந்தாலும் சிறு சந்தேகம் நெஞ்சோரம் இருந்திட்டே இருந்தது.
மறுநாள் காலை, ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு, ஆற்றங்கரை வந்த அசோக், அந்த ஆற்றோட்டத்தையே பார்த்துக் கொண்டே சம்பித்து இருந்தான்.
அப்போது அங்கு வந்த அமான், அசோக்கிடம், " ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தெரிகிறதே! ", என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
அதற்கு அசோக்," நான் யாரென்று சிந்திக்கிறேன் சகோதரரே. இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தேன்?.
எங்கு இருந்தேன்? என் பெயரென்ன? எதுவும் எனக்கு ஞாபகமில்லையே. ",என்று கண்கள் கலங்கிட ஆங்கிலத்தில் சொன்னான்.
அதைக் கேட்ட அமான், " உன்னை இப்போது தான் பார்த்தாலும், பலமுறை பார்த்து பழகியது போலவே உணர்வு ஏற்படுகிறது. ஆதலால் நான் உனக்கொரு பெயர் வைக்கிறேன். இன்றிலிருந்து உன் பெயர் கலீல் என்பதாகும். அதன் அர்த்தம் ஆத்ம நண்பன் என்பதாகும். ", என்று ஆங்கிலத்தில் கூறிட அசோக் மகிழ்ச்சியடைந்தான்.
பெயர் தந்த சகோதரருக்கு நன்றி கூறினான்.
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினான்..
அன்றிலிருந்து அனைவரும் அவனை கலீல் என்றே அழைத்தார்கள்..