உன்னோடான என் முதல் பயணம்

அவர் : காலேஜ் finish ஆச்சு next என்ன பண்ணப்போற ...
நான் :( என்ன விடை சொல்வது என்று புரியாமல் விழிக்கிறேன் ,நீ என்னை எதுவும் செய்யாமல்
இருப்பதால் இந்த நொடியில் திட்டி தீர்க்கிறேன். சரியாய் வசமாய் இடம் அமைந்தும் தெளிவாய் எதுவும் சொல்லிவிடாமல் நான். நினைத்தவை எதுவும் நடக்காததால் வியர்வையோடு வழியும் கண்ணீர் ஆகிறேன் விழியோடு வழிகையில் அது தூசு என்று மறைத்து கொண்டே .....)
ம்ம்ம் இன்னும் முடிவு பண்ணல final result க்கு அப்புறம் தான் ,நீ என்ன பண்ண போற ,
அவர் : PG தான்
நான் : எந்த college
அவர் : நம்ப trichy st.joseph காலேஜ் or saranathan காலேஜ்
நான் : ம் ம் k
அரை நிமிட பேச்சுதான் ஆனால் இன்னமும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது நினைத்தவை எல்லாம் நடக்காமல் போனால் என்ன இனி வரும் காலங்களில் என செய்ய போகிறேன் என்று அந்த அரை நிமிட பேச்சில் முடிவு செய்து விட்டேன் ..... கல்லூரி தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போனது அந்த பேச்சில் ஒரு மாதம் இருந்தது கல்லூரி திறப்பிற்கு அந்த நாட்களில் ஒவொரு நாட்களிலும் உன் நினைவுகளோடு நகர்த்தினேன் தனியாய் என் சிரிப்பு என்றால் அதன் காரணம் அவன் . காலையில் ஏன் விழிப்பு நடக்கிறது என்று கடிந்து கொண்டேன் கணவாய் அவன் தினமும் வருவதால் தொலை தொடர்பு சாதனம் என நிறைய இருந்தும் தொடர்பு கொலைதான் கொன்ஜம் மனம் தயங்குகிறேன்
கடிதம் கதை என் எதையோ எழுதுகிற சாக்கில் இடத்தை காகிதங்களால் நிரப்புகிறேன்
ஏன் இந்த காதலுக்கு இவ்வளவு பாரபட்சம் ஒரு தலை காதல் என்றால் அவ்வளவு பாரபட்சமா என்னை எப்படி வாட்டி வதைக்குது நனைந்து போன சரவெடியை காயவைக்கும் குழந்தை வெயிலில் காய்வது போல நானும் உன் நினைவுகளில் காய்கிறேன் எப்படியோ ஒருவழியாய் நாளும் நகர்த்துவிட்டது உன்னை காணும் நாளும் வந்து விட்டது எப்படியோ நகர்ந்து விட்ட நாட்களை மறந்துகொண்டேன் இனி வரும் காலங்கள் உன்னோடுதான் என்ற திமிரில் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது கல்லூரி திறப்பின் முதல் நாள் நுழைவு வாயிலில் இருந்து ஒவ்வொரு அடியாய் நகர்கிறேன் உன்னை எதிர்ப்பார்த்துக்கொண்டே எங்கேயோ பரீட்சைய பட்ட உடை நீதான் என்று ஏமாந்துபோனேன் இருபுறமும் யார்யாரோ என் கண்ணில் அது நீதான் என்றேன் ஒலியெழுப்பிக்கொண்டே நகர்ந்த வண்டியிலும் நீதான் என்ற நினைப்பு
சிரித்து கொண்டேன் என்னோடு கோபம் கொள்கிறேன் உன்னோடு என் நிஜத்தையும் ஏன் திருடினாய் என்று .........