வேஷம் போடும் உலகம்

உலகைச் சிரிக்க வைக்க‌
வேஷம் போடுகிறான் கோமாளி

உலகம் அழுக வைக்க‌
விம்மி நிற்கிறான் ஏமாளி

வெளி வேஷத்திலேயே
தன் எண்ணம் வெளிப்படுத்துவான் ஒருவன்

வெளித் தோற்றத்திலே
துளியும் காட்டிக்கொள்ள மாட்டான் ஏமாற்றுபவன்

பார்த்தவுடன் அவரின் குணங்களை
அறிந்து கொள்ள
இங்கு யாரும் சாமியும் அல்ல...

மனிதனால் எவ்வளவு பட்டாலும்
திரும்ப திரும்ப
நன்மை செய்திட எவரும் பூமியும் அல்ல...

பட்டுத் திருந்தினால் தான் உண்டு..
திருந்தாவிட்டால் உலகமே போடும் புதுக் குண்டு..

கோமாளி போல சிரிப்புக்காட்டி
சிரித்த படி பலர் வாழ்ந்தாலும்
அவர் உள்ளம் என்னவோ
அழுது கொண்டு தான் இருக்கும்...

எனவே இருக்கும் வரை
எவரின் துன்பம் கண்டும் இகழ வேண்டாம்
துன்பங்கள் யாருக்கும் எப்போதும்
இவ்வுலகிலென்றும் நிகழ வேண்டாம்...

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (23-Dec-17, 9:00 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vesam podum ulakam
பார்வை : 550

மேலே