பம்பரம்
நீளமான நூலெடுத்து
ஆழம்பாக்கும் ஆணியிலே
சுத்தி சுத்தி மேலவர
கையிடுக்கில் நூல் பிடிச்சு
பூமியிலே காத்திருக்கும்
பம்பரத்தின் மேலேதான்
குத்தும்படி சுத்திவிட
பொட்டுவச்சு துடிதுடுக்கும்
பம்பரத்தைப் பார்த்தபட
நண்பனவன் வடிக்கும் கண்ணீர்
இன்றுவரை நினைவிலுண்டு
கண்ணிடுக்கில் கண்ணீருண்டு
காயப்பட்டு தூக்கிப்போட்ட
பம்பரமும் பரணில் உண்டு