நினைவுகளுடன் நான்

மாலை நேர மரத்தின் கீழே
மாறி மாறி வரும் நிழலைப் போல‌
சோலை உந்தன் நினைவினாலே
சோகம் மகிழ்ச்சி எனக்குள் மாறி மாறி

உன்னை நினைக்க மகிழ்ச்சி உதிக்கும்
உந்தன் பிரிவோ சோகம் கொடுக்கும்
என்னை ஏனோ தள்ளி வைத்தாய்
ஆசையாய் வந்தேன் கிள்ளி வைத்தாய்

விட்டுச் சென்றாய் விரும்பித் தானே
கொட்டிச் சென்றாய் வலிக்கும் தானே
முட்டிச் செல்லும் மாடு கூட‌
எட்டிச் சென்று திரும்பிப் பார்க்கும்

கட்டிக் கொள்ள கனவில் கிடந்தேன்
வெட்டிச் சென்றாய் கருவேலம் மரமாய்
பட்டிக் காடு மனசு மட்டும்
தட்டிக் கேட்க தயக்கம் உண்டு

உன்னை என்னில் அடைத்து வைத்தேன்
கண்ணீர் வரவே அழது வைத்தேன்
என்னை நானே தேற்றிக் கொண்டேன்
உன்னை மறக்கயெப்படி மாற்றிக் கொள்வேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-17, 8:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ninavugalutan naan
பார்வை : 196

மேலே