பார்வையால் பாலமிட்டாய்

நெத்தியில பொட்டுவச்சு
நெஞ்சத்தில் நிலையாக இடம்பிடிச்சா
காதலென்றால் என்னவென்று
காதலன் என்னிடம் பாடம்படிச்சா

தாவணி அணிந்துவந்து
தாறுமாறா மனச கிழிச்சா
சேலையொன்னு கட்டிவந்து
சேர்த்து ரவிககையோடு தச்சா

அவளோட அழகை
அளவெடுக்க கருவிதான் எண்ணுமோ
என்னால் முடியாதென
எண்ணுமளவிற்கு அவளழகு மின்னுமோ

கூந்தலை சிக்கெடுக்க
கூடி வந்ததோ நவகிரகங்கள்
நிலவிற்கு ஒளியூட்ட
நின்முகத்திற்கு வழிவிட்டதோ மேகங்கள்

என்னை நாடிவந்தாய்
எங்கு தொலைந்ததோ சோகங்கள்
முத்தங்கள்தான் எந்தன்
முழுமையான அன்ன ஆகாரங்கள்

ஆரம்பப் புள்ளிவைத்தாய்
ஆனந்தமான நம் காதலுக்கு
பார்வையால் என்னுள்
பாலமிட்டாய் நம் மோதலுக்கு !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (23-Dec-17, 7:38 pm)
பார்வை : 321

மேலே