தோல்வி

யார் யாருக்கு
என்ன கிடைக்க வேண்டுமோ...
கிடைத்துவிட்டது.

பங்கு கிடைக்காமல்
பரிதவித்த மக்கள்
ஊழலில் பங்குபெற்றதில்
உற்சாகமாகக்
கொண்டாடி விட்டார்கள்.

மனிதனைச் செலுத்தும்
இரண்டில்
அச்சம் விலகி
ஆசை மட்டும் மேலோங்கியது.

காற்று, தண்ணீர், மண்
மாசடைந்தது போல
மனிதனும் மாசடைந்தான்.

அறம் தோற்றது
மானுடம் தோற்றது.
யார் வென்றால் என்ன?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (24-Dec-17, 7:02 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : tholvi
பார்வை : 73

மேலே