நிற மாலை ---இரு பார்வை


வெள்ளை ஏழாகப் பிரிந்து
நெட்டை நிற மாலையாக
நிற்கும் போது
அலை நீளம் அளப்பவன்
விஞ்ஞானி ஆகிறான்
சற்று வளைந்திருந்தால்
அழகாய் இருக்குமே என்று
சிந்திப்பவன்
கவிஞன் ஆகிறான்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-11, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 321

மேலே