காத்திருந்த காதல்

என் விழிகளில் ஏனோ வெப்ப சலனம்...

உன்னைப் பார்த்ததும் நின்றுவிட்ட
என் உலகின் நிலைக்கு
காரணம் தேடி சுழன்று தவிக்கும் என்
கரு விழிகள் தான் காரணமோ..!

மூச்சின் அடர்த்தி கூடி நான்
மூர்ச்சையாகும் முன்
வெறித்த என் பார்வையில்
வெறுப்பாகி நீ நகர்ந்தாய்!

என் இயக்கங்கள்
இயல்பாக கருணை செய்தாய்!

முதன் முறையாக
இதயத்தில் வலி தந்து, அதன்
இருப்பிடம் உணரச் செய்தாய்!

நான் உனக்காவன் என்று
நாசுக்காய் தோன்றியது எனக்கு! – இது
என்னை மீறி நடக்கும் ஒன்று
ஏக போகமாய் புரிந்தது எனக்கு!

கைப்பற்றிய காதலிடம் நான்
முரணில்லாமல் சரணடைய
வானம் கூட தூரல் தூவி வாழ்த்தியது!

என் காதலின் ஆரம்பம் உன் அழகல்ல – ஆனால்
நீ பேரழகியானதை என்னவென்று சொல்ல?
உன் கண்களில் தெரியும் புனிதமோ,
தெய்வமோ,
தூய்மையோ,
தனித்தன்மையோ,
காரணமென்று ஒன்றை மட்டும் எப்படி சொல்ல?

என் கற்பனைகளுக்கு கிடைத்த காட்சி அல்ல நீ,
உன் காட்சியிலிருந்து ஆரம்பமானது என் கற்பனைகள்!

உன்னைப் பார்த்ததும் பூக்கவில்லை என் காதல்
உனக்காகவே காத்திருந்தது என் காதல்!

என் மனதை உனக்கு சொல்ல
இந்த கவிதை போதும்
என் காதலைப் புரிந்து கொள்ள உனக்கு
எத்தனை காலம் வேண்டும்?
ஜென்மங்களாய்னும் தருவேன்...!
அந்த நொடி அடுத்த நொடியே வருமென,
காத்திருப்பேன்...!

எழுதியவர் : நந்தினி சு (25-Dec-17, 3:53 pm)
சேர்த்தது : Nanthini S
பார்வை : 3930

மேலே