ரசிகன்
![](https://eluthu.com/images/loading.gif)
வலியென்று தெரிந்த பின்பும்
சில வரிகளின் மீது
மோகம் கொண்டவன்,
கவிதைகளின் காதலன்
பாடல்களின் மேல்
பைத்தியக்காரன்,
இசையின் மேல்
இன்னமும் புரியாத
மயக்கம் கொண்டவன்,
கதைகளின் மேல்
கவர்ச்சி கொண்டவன்,
சிறுகதையின் மேல்
சிற்றின்பம் கொண்டவன -- என
முப்பொழுதுகளிலும் இதன்
நினைவில் வாழும்
நானும் ரசிகன் தானே...!