ப்ளஸ் டூ வசந்தம்

குற்றாலத் தென்றல்
உடல் தொட
உடலும் உள்ளமும் மகிழ்ந்து
குதூகலிப்பர் மக்கள்...
தோப்புக்கள் துறவுகள்
ஏரிகள் குளங்களோடு
இயற்கை எழில் கொஞ்சும் கடையநல்லூரைத் தொட
குற்றாலத் தென்றலே
குதூகலிக்கும்...

புத்தகங்கள் பூரிப்படையும்
அழகிய ஊர்
கடையநல்லூரின்
கல்வியின் ஊற்று
எழில்மிகு ஏற்றமிகு
அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
பயிலும் மாணவர்களின்
கைகளில் தவழ்வதற்கு...
இன்றளவும் வசந்தங்களை
உருவாக்கித் தரும்
அந்தக்காலத்தின் நிகழ்கால
வசந்தம் இந்தப் பள்ளி...

மேல்நிலை அடைய
மேல்நிலைக் கல்வி
கற்றது ஆயிரத்து
தொள்ளாயிரத்து
எண்பத்திரண்டில்...
முப்பத்தைந்து ஆண்டுகள்
முடிந்தும் நண்பன் ஆனந்தின்
அருமையான சிரிப்பு
அப்படியே இருக்கிறது
இன்றும் சிந்தையில்...

உடலளவில் உயர்ந்தவன்
உள்ளத்தில் மிக மிக
உயர்ந்தவன் ஆனந்த்...
எளிமையாய்ப் பழகுவது
ஆனந்தின் வலிமை...
நேர்த்தியான
சிந்தனை பேச்சு செயல்
ஆகியவற்றிற்கு
சொந்தக்காரன் இவன்...
என்னுடன் ஆனந்த்
படித்தது ப்ளஸ் டூ...
அப்போதே தெரிந்தது
வேகமும் விவேகமும்
இவனது ப்ளஸ் டூ
என்பது...

தூரத்தில் இருந்தாலும்
நட்பு பாராட்டுவதில்
பக்கமாகவே தெரிகிறான்..
இவனது நட்பின் அடர்த்தி
காலங்களால் நீர்த்துப்
போகவில்லை...

சொர்ணவேல் ஆசிரியர்
கற்றுக் கொடுத்த
தமிழ் போல்...
அழகர்சாமி ஆசிரியர்
கற்றுக் கொடுத்த
கணிதம் போல்...
ராமன் ஆசிரியர்
கற்றுக் கொடுத்த
ஆங்கிலம் போல்...
செல்லையா ஆசிரியர்
கற்றுக் கொடுத்த
தாவரவியல் போல்...
சின்னச்சாமி ஆசிரியர்
கற்றுக் கொடுத்த
வேதியியல் போல்...
இன்னும் ஆசிரியர்கள்
கற்றுக் கொடுத்த
பாடங்கள் போல்
ஆனந்திடம் கற்றுத்தெரிந்த
நட்பு பேணுதலும்
ஆளுமைத் திறனும்
நண்பர்களின் வளர்ச்சிக்கு
என்றும் பங்காற்றும்...

காலங்கள் எல்லாம்...
மேகத்தை வேண்டித்
தளிருக்குத் தவமிருக்கும்
இலையுதிர்க்காலமாய்
இல்லாமல்
வானமே வலிய வந்து
வாழ்த்துக் கூறும்
வசந்த காலமாய் அமைந்து
நண்பன் ஆனந்த்...
என்றும் பேரானந்தமாய்
வளங்கள் எல்லாம்பெற்று
வாழ்க பல்லாண்டு!
நண்பன் ஆனந்துக்கு இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🙏🍰🎂🌹🌷🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (25-Dec-17, 6:44 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 163

மேலே