வரம் தா இறைவா

இறைவா நீ என் முன், வந்தாலே நானும்,
அன்னை அவள் வேண்டும் என்பேன்.
எட்டாத உயரம், நான் தொட்டு வரவே,
தந்தை அவர் வேண்டும் என்பேன்.

அழகான இல்லம், என் குடும்பம் அதிலே,
வசிக்கத்தான் ஆசை என்பேன்.
இயற்கை வளம் பொலிகின்ற, இடம் அருகே
அவ்வில்லம் அமைக்கத்தான் வேண்டும் என்பேன்.

விளையாட நானும், ஒரு தோழன் எனக்கே,
நீ தர வேண்டும் என்பேன்.
அன்பென்னும் நூலை, அவனிடம் கொடுத்து,
நீ விட வேண்டும் என்பேன்.

தனிமை எனும் தீயில், இனி ஒரு நாளும்,
நான் வாடக் கூடாதென்பேன்.
அனாதை நிலையே, எவருக்கும் இனிமேல்
கொடுக்காதே இறைவா என்பேன்.

கனவாக இதுவும், இல்லாமல் இருந்தால்,
இனி கவலைகள் இல்லை என்பேன்.
இறைவா நீ என் மனதில், எப்போதும் இருந்தால்,
அது தானே சொர்க்கம் என்பேன்.
இறைவா, நீ எந்தன் பக்கம் என்பேன்.

எழுதியவர் : ஆனந்த கண்ணன் (26-Dec-17, 11:34 am)
சேர்த்தது : ஆனந்த கண்ணன்
பார்வை : 929

மேலே