ஆணின் குமுறல்
அவன் நட்பிற்காகவும் காதலுக்காகவும் ஏங்கினான் அவனின் காதலை வெளிப்படுத்த, சுவாசிக்க ஒருத்தி வருவாள் என்று கனவோடு காத்திருந்தான் அவனின் நினைவுகளை மற்றவர்களிடம் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் நெஞ்சினுள் புகுத்தி வருத்திக் கொண்டான். அவன் பெண்ணைகளையே வெறுக்க முடிவு செய்து விட்டான்.
அவனின் பள்ளி நினைவுகளை நினைத்து நினைத்து வெறுத்து வந்தான்.
அவன் பிறப்பிடம் ஒரு கிராமம். அவனின் பெற்றோர்கள் இருந்தும் இல்லாதவர்களை போல இருந்தான்.
இருந்தாலும் அவனுக்கு அம்மா மீது அளவுகடந்த பாசம். ஏனோ வாழ்வில் பிடி படாமல் வாழ்ந்தான்.
வாழ்வை வெறுக்கவில்லை வாழ துடிக்க நினைத்து சுவாசிக்க மறந்து விட்டான்.
தொடரும் ......