ஈழம் ஒரு அரசியல் கண்ணோட்டம்-1

ஈழம் ஒரு அரசியல் கண்ணோட்டம் -1

ஜெயவர்த்தனெ-ராஜீவ் ஒப்பந்தம் ஆனது 1987ம் ஆண்டு மே 29ல். (ராஜீவ் ஒப்பந்தம் எனவே இதை அழைக்கலாம்) அந்த ஆண்டு இந்தியாவில் வந்ததுதான் தடா (TADA) திருத்தம் 1987 மே 23.
ராஜீவ் ஒப்பந்தம் வரக்காரணமாக இருந்த இந்தியாவையும் அக்காலக்கட்டத்தில் ராஜீவின் புரிதலையும் சற்றே கண்ணோட்டம் விடலாம்.

பஞ்சாப் எரிந்துக் கொண்டிருந்த காலம் அது. பஞ்சாப் எரிந்து அடங்கிய பிறகே கஷ்மீர் பிரச்சினை தொடங்கியது. அப்போது கஷ்மீர் பிரச்சினை சற்றே சாயலாக இருந்தது எனினும் பஞ்சாப் அளவிற்கு கொழுந்து விட்டு எரியவில்லை. எனவே ராஜீவ் ஒப்பந்தம் வரக்காரணமாக இருந்த காலக்கட்டதில் பஞ்சாப் பிரச்சினையே பிரதானமாக இருந்ததால், இந்தியாவில் தனிநாடு கோரும் காலிஸ்தான் அமைப்பாளர்கள் தீவிரவாதிகளாக கருதப்பட்டு அவர்களை ஒடுக்கவே கொண்டு வரப்பட்டது இந்த தடா திருத்தச் சட்டம்
.
அந்த சூழலில் கொண்டுவரப்பட்ட இந்த ராஜீவ் ஒப்பந்தம் அதன் பின்னணி ஆராயப்படவேண்டிய ஒன்று.
காலிஸ்தான் கோருபவர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தியதால் அதே பார்வைதான் பொருந்தும் தமிழ்போராளிகளுக்கும் என்று ராஜீவின் மனதில் நிறுவப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்தியாவின் இறையாண்மையையும் இலங்கையின் ஒருங்கமைத்த தன்மையையும் ஒரே தராசுத்தட்டில் நிறுத்திக் காண்பிக்கப்பட்டதன் விளைவாகவே தமிழினப் போராளிகள் தீவிரவாதிகளாக வர்ணம் பூசம் பட்டனர்.

காலிஸ்தான் கோரிக்கையாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் தூண்டப்பட்டு, தமக்கு என்று ஒரு கொள்கையும் இல்லாமல் வழிதவறிய இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு பாகிஸ்தான் நடத்திய அரசியல் நாடகம். அதனால்தான் அதை இந்தியாவால் அடக்க முடிந்தது. அது தீவிரவாதம் என்பதும் உறுதியானதால்தான் அதை அடியோடு ஒழிக்க முடிந்தது இந்தியாவால்.
அதே கண்ணோட்டத்தில் இலங்கை தமிழின போராட்டத்தையும் பார்த்து ஈழ போராளிகளையும் தீவிரவாதிகள் என முடிவுகட்டி இந்த ராஜீவ் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற்பட்ட பிழையால்தான் இன்னும் பிரச்சினை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள என்னவென்றால், தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் துணை நிற்கும். அதற்காக சில கட்டுப்பாடுகளுக்கு இலங்கை ஒப்புக்கொள்ளும். அந்த கட்டுப்பாடுகள் என்ன தெரியுமா? இலங்கை அரசு போராளிகளை எதிர்த்து போர் தொடுக்காது .. தமிழர்களை கொடுமைப்படுத்தாது. அதாவது இலங்கையில் அமைதி திரும்புவதை இந்தியா உறுதி செய்யும். எனவே அந்த வேலையை தனது படைகளை அனுப்பி இந்தியா செய்யும். அதற்கு இந்திய அமைதிப் படை என்று ஒரு பெயரும் சூட்டப்பட்டது.

அந்த அமைதிப்படை செய்தது என்ன தெரியுமா தமிழர்களையும் தமிழ்ப் போராளிகளையும் கொன்று குவித்தது. அதாவது இலங்கை தனது தலைவலியை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டு இன்பச்சுற்றுலா சென்று விட்டது. அதில் இருந்து வளர்ந்ததுதான் இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையே அடங்கா காழ்ப்புணர்வு.
தீவிரவாதத்திற்கும் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத ராஜீவ் காந்தி, உலக நாடுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக்க கனவு கண்ட அறிவு ஜீவி.

அந்த இந்திய அமைதிப்படையால் வாழ்வுரிமைப் போராளிகளின் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதில் இருந்தவர்கள் வட இந்தியர்கள். இந்திய ராணுவத்தில் போர்ப்பயிற்சி அபாரமாக பெற்றவர்கள். அவர்களுக்கு புரிந்தது விட்டது தமிழ்ப் போராளிகள் தீவிரவாதிகளில் இல்லை என்பது. இந்திய அமைதிப் படை உறுப்பினர்களிடம் மனத்தொய்வு ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் வந்தது தீவிரவாதிகள் என்று எண்ணிய கூட்டத்தை ஒழிக்க. அவர்கள் கணடதோ வாழ்வுரிமை போராட்டத்தினரை. எனினும் போர் எனும்போது ஏற்பட்ட இழப்பை தடுக்க முடியவில்லை. அமைதிப் படையினர் 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். எப்படி தெரியுமா, போர்முறைப்படி மட்டுமே.
பிணைக்கைதிகளாக இருந்த ஒரு அமைதிப் படை உறுப்பினர்கள் கூட இம்சைக்கு ஆளாக்கப்படவில்லை. தமிழ் போராளிகள் தங்களின் அபார போர்த்திறமையை காட்டி அசத்தியதோடு, பிணையான அமைதிப்படை உறுப்பினர்களையும் பண்பாக கண்ணியமாய் நடத்தினர்.
எந்த தருணத்திலும் தரக்குறைவாக நடத்தியதே இல்லை. நடத்தி இருந்தால் இந்திய ராணுவம் அதை ஒரு குற்றப் பத்திரிகையாக்கி இருந்து இருக்குமே. அதாவது இந்திய அமைதிப்படையினரால் அங்கு எங்குமே தீவிரவாதத்திற்கான அறிகுறியையே பார்க்க முடியவில்லை. இந்திய நடுவண் அரசின் நிர்பந்தத்தால் தொடர்ந்து கொண்டிருந்த தங்களின் தாக்குதலில் அமைதி படையினரால் தீவிரம் காட்ட முடியவில்லை.

தனது படைவீர்களை இழந்த இந்திய அமைதிப்படை தனது தொய்வுற்ற நிலையால் இரண்டு சங்கதிகளை பறை சாற்றியது.

ஒன்று. தமிழ்ப்போராளிகள் போரில் சிறந்த பயிற்சி பெற்று இருந்தது. மற்றொன்று அவர்கள் தீவிரவாதி இல்லை என்பது மட்டுமல்ல அவர்கள் மனிதாபிமானமுள்ள வாழ்வுரிமைப் போராளிகள்தான் என்பதையும்தான்.

எனவேதான் அவர்களிடம் தனது வீரர்களை இறந்த பின்பும் அதனால் அவர்கள் மீது ஆத்திரமோ காழ்ப்புணர்வோ கொள்ள முடியவில்லை.

அவர்களை திருப்பி அனுப்பிய தமிழ்ப்போராளிகள் இந்திய அமைதிப் படையை பாராட்டியே அனுப்பினர். இந்திய அமைதிப்படை நல்ல திறமை வாய்ந்ததுதான் என்றும் தங்களின் உண்மை நிலை புரிந்தேதான் அது இழப்பை சந்தித்தது என்றும் எனவே இந்திய வீரர்களின் திறமையின் பால் சற்றும் அவநம்பிக்கை கொள்ள வாய்ப்புகள் இல்லை எனவும் ஆறுதல் சொல்லி திருப்பி அனுப்பினர் நம் தமிழ் போராளிகள். (ஆவண ஆதாரங்கள் உள்ளன)

யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை?. ஒரு விளையாட்டுக்கள வீரனைபோல. வெற்றி பெற்றபின்பும் தோற்றவனை பாராட்டும் பண்பு! இந்திய அமைதிப்படை உடற்காயம் ஏற்பட்டாலும் மனக்காயம் இன்றி அங்கிருந்து தோல்வியுடன் வெளியேறியது.
இருப்பினும் இளம் துடிப்புள்ள ராஜீவால் சமாதானம் அடைய முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட மானப் பிரச்சினையாக பார்க்கத் தொடங்கி, சமயம் கிடைக்கும்போது தனது திறமையைக் காட்ட நினைத்து காத்திருந்தார்.

நவம்பர் 1988ல் மாலத்தீவில் 500 தமிழ்ப்போராளிகள் அந்த நாட்டுத் தலைவரை பணயமாக பிடித்து, அரசு அதிகாரங்களை சற்றேறக்குறைய கைப்பற்றிய நிலையில் இந்தியப் படைகளை அனுப்பி அதை திரும்ப மாலத்தீவு அரசிடமே ஒப்படைக்கும்படி செய்வித்தார். அதை சாதகமாக பயன்படுத்திய இலங்கை அரசு, இந்திய அரசிற்கு தூபம் போடும் வேலையை மிகவும் பிரமாதமாகவே செய்தது. தமிழ்ப் போராளிகள் இந்த பரப்பளவுக்கே பாதுகாப்பு பிரச்சினையை விளைவிக்கும் தீவிரவாத அமைப்பு என்று. அதனால் இந்திய நடுவண் அரசு தமிழ்ப்போராளிகளை ஒடுக்குவதில் இன்னும் அதிக காட்டம் காட்டத்தொடங்கியது.

அப்போது தொடங்கியதுதான் இந்தியாவில் மத்திய அரசுக்கான தேர்தல்.

அந்த தருணத்தில் இருந்ததுதான் போஃபர்ஸ் ஊழல். பதவி பிடிக்கும் ஆசையில் இருந்த வி.பி. சிங், மிஸ்டர் க்ளீன் எனும்போர்வையில் அந்த ஊழல் சங்கதியை ஊதி பெரிதாக்கி ராஜீவை தோற்கடிக்க வியூகம் வகுத்தபோது, காங்கிரசின் குள்ளநரிக் கூட்டம் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு, சந்திரசாமி எனும் ஒரு கோடாங்கியை மையப்புள்ளியாய் வைத்து சுழன்றது. ராஜீவ் திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) இல் தேர்தல் பிரசார உரையாற்ற வருவதற்கான ஏற்பாடுகளில் தனது கைவரிசையை கச்சிதமாய் காட்டிவிட்டு, எல்லாம் மாயமாய் மறைந்து விட்டு, அப்பாவிகளான ஒரு சிலரை பேட்டரி வாங்கிக்கொடுத்தான், அதற்கு பில்லும் எங்களிடமிருக்கிறது என்று சாட்சியும் ஏற்பாடு செய்து அனைத்தையும் திசை திருப்பி கடந்த 20 வருடங்களாக குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறது.
நானும் கடந்த 20 வருடங்களாக எப்படியும் 250 பேட்டரிகள் வாங்கியிருப்பேன் எந்த கடைக்காரரும் மறந்தும் அதற்கு பில் கொடுக்க முன் வந்ததாக தெரியவில்லை. அது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பொருள்கள் வாங்கியிருக்கிறேன். எதன் பில்லையும் இதுவரை இந்த புலன் விசாரணைக்குழு வைத்திருந்தது போல பாதுகாப்பாக வைத்திருந்தது இல்லை.

இவர்களின் 2ஜி வழக்கின் பல கோப்புக்களின் பலபக்கங்கள் அடுத்து வரும் ஆறு மாதங்களிலேயே காணாமல் போகும்போது, இந்த பேட்டரி வாங்கி, அதில் வந்த பில் மட்டும் எப்படித்தான் இத்தனை வருடங்கள் பாதுகாப்பாக இருந்ததோ? அதுவும் கொலைச்சதி செய்தவன் பேட்டரிக்கு பில் வாங்கியதும் அதை பத்திரப்படுத்தி இருந்ததும் அதை இந்த புலன் விசாரணைக்குழு கைப்பற்றி மிகவும் பாதுகாப்பாக இத்தனை வருடங்களாக வைத்திருத்து அதை சாட்சியாக வைத்து அவனை தூக்கிலிடத் துடிப்பதும் எத்தனை அழகான தத்ரூப திரைப்படக்கதை. இதன் மூலம் ராஜீவ் கொலைக்கும் உலக மாவீரன் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்து விட்டார்ளாம் இந்த அதி மேதாவிகள்.
ராஜீவின் மரணத்தின் போது மத்தியில் பிரதமர் பதவியில் இருந்தது முன்னாள் தீவிர காங்கிரஸ் வாதியான சந்திரசேகர் எனும் நபர். அவருக்கு எந்த பொறுப்பும் இல்லையாம். சரி. மாநிலத்தில் இருந்தது திமுக அரசு. அந்த கட்சியின் முதலமைச்சருக்கோ, கட்சியினருக்கோ எந்த பொறுப்பும் இல்லையாம். சரி. ராஜீவின் வருகைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த காங்கிரஸின் மாநில, தேசியத் தலைவர்கள் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லையாம். சரி. ராஜீவின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த எந்த பாதுகாப்பு அதிகாரிக்கும் கூட எந்த பொறுப்பும் இல்லையாம்.

அதுவும் போகட்டும். தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் யாருக்குமே எந்த பொறுப்பும் இல்லையாம். அது எப்படி ஒரு தமிழ்நாட்டு காவலாளி கூட பொறுப்புப் பட்டியலில் வராததேனோ. சரி அதுவும் போகட்டும். அவரது காரியதரிசி... வேண்டாம். மாநிலத்தின் ஏதேனும் துறை செயலர் எவரேனும்... ம்ஹூம் எவருக்குமே தொடர்பே இன்றி இந்த ஒருவன் மட்டுமே இந்த கொலைச்சதியை மிகக்கச்சிதமாக நிறைவேற்றி விட்டனாம். மற்ற எவருக்குமே எதிராக ஆதாரம் இருப்பது வெகுதொலைவு விசாரணைப் பட்டியலில் இடம் பெறக்கூடிய அடித்தளம் கூட இல்லையாம். இதெல்லாம் ஒரு தனிப்பெருங்கதை. நமது சங்கதிக்கு செல்வோம்.
உண்மையான கொலையாளியை கைவைத்தால் பலவித சங்கதிகளும் அம்பலமாகும் என்பதால் அனைத்து இடத்தில் இருந்தும் மௌனமே எதிரொலியாய் பெறப்பட்டது. போன தலைவர்தான் போய் சேர்ந்து விட்டாரே. ஆயினும் அதற்கு காரணம் சொல்லவேண்டுமே. அவருக்கு எதிரிகள் அப்போது வி.பி. சிங்கை தவிர அவ்வளவாக எதிரிகள் உருவாகியிருக்க வில்லையே. அவருக்கு எதிரி என்று எவரையேனும் காட்டவேண்டாமா. பஞ்சாபிலோ, வட இந்திய மண்ணில் எங்கேனும் அவர் இறந்திருந்தால் காலிஸ்தான்வாதிகளை கை காட்டலாம். இறந்தது தமிழ்நாட்டில் அல்லவா. யாரை கைகாட்டுவது.

இருக்கவே இருக்கிறது காரணம். மனதில் அவரே கறுவிக் கொண்டிருந்த தமிழ்ப்போராளிகள். எளிதாக கைகாட்டிவிட்டு, முட்டாள் ஊடகங்களுக்கும் பரபரப்பு கதை மசாலா அள்ளி தெளித்துவிட்டு நாடகத்தை அரங்கேற்றி தத்தமது தோல்களை சிராய்ப்பு இல்லாமல் காப்பாற்றியாகி விட்டாயிற்று. இறந்தவரின் மனைவியோ அரசியல் என்பது அவ்வளவாக தெரியாதவர். அவருக்கும் அதே கதையை சொல்லி அவர் மனதில் வன்மம் ஏற்றி விட்டாயிற்று.

சரி அது பழைய கதை. அந்த நேரத்தில் இந்த அம்மணிக்கு அரசியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுதான் அவர் மிகவும் அனுபவசாலி ஆயிற்றே. இப்போதுமா வேறுபாடு தெரியவில்லை. உண்மை நிலவரம் புரியவில்லை.
புரியாமல் என்ன. தெரியாமல் என்ன. அதே ராகம்தான். போனவர் போயேவிட்டார். இனி அழுது என்ன பயன். சரி. அந்த கதையையே தொடர்ந்து நடத்தி செல்ல வேண்டியதுதானே. ஒருகை பார்ப்போம் எனும் எண்ணம்தான்.
எனவே முதலில் உள்நாட்டு அரசியலை பார்ப்போம். பார்த்தாயிற்று. பிறகு பதவி வருமா என்று பார்ப்போம். இல்லை வரவில்லை. சரி ஒரு கைபொம்மையை வைப்போம். பிறகு.... பிறகு என்ன வேண்டிய பணவரவு செலவுகளை பார்ப்போம். சரி அதையும் பார்த்தாயிற்று. பிறகு... இப்பொழுது பார்க்கலாம் அந்த சமாசாரத்தை.

கூப்பிடுங்கள் அந்த இட்லரின் அவதாரத்தை. பறக்கட்டும். தேவையான கட்டளைகள். இலக்கு தேதி குறிக்கப் படட்டும். எல்லாம் முடிந்தாயிற்று. இப்போது என்ன செய்யலாம். சற்றே இளைப்பாறலாம் என்றால் மழை விட்டாலும் தூவானம் விடாது போலிருக்கிறதே.
இந்த சூழலில்தான் ஈழப்பிர்ச்சினையை பார்க்கவேண்டும்.

இதுதான் முக்கிய சங்கதியே.

தொடரும்….

எழுதியவர் : மங்காத்தா (26-Dec-17, 9:26 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 446

மேலே