Vinothkumar.M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vinothkumar.M
இடம்:  Dharmapuri
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  1

என் படைப்புகள்
Vinothkumar.M செய்திகள்
Vinothkumar.M - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 12:29 pm

அவன் நட்பிற்காகவும் காதலுக்காகவும் ஏங்கினான் அவனின் காதலை வெளிப்படுத்த, சுவாசிக்க ஒருத்தி வருவாள் என்று கனவோடு காத்திருந்தான் அவனின் நினைவுகளை மற்றவர்களிடம் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் நெஞ்சினுள் புகுத்தி வருத்திக் கொண்டான். அவன் பெண்ணைகளையே வெறுக்க முடிவு செய்து விட்டான்.
அவனின் பள்ளி நினைவுகளை நினைத்து நினைத்து வெறுத்து வந்தான்.
அவன் பிறப்பிடம் ஒரு கிராமம். அவனின் பெற்றோர்கள் இருந்தும் இல்லாதவர்களை போல இருந்தான்.
இருந்தாலும் அவனுக்கு அம்மா மீது அளவுகடந்த பாசம். ஏனோ வாழ்வில் பிடி படாமல் வாழ்ந்தான்.
வாழ்வை வெறுக்கவில்லை வாழ துடிக்க நினைத்து சுவாசிக்க மறந்து விட்டான்.

மேலும்

Vinothkumar.M - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2014 1:42 am

==========================
தன்னம்பிக்கை கவிதை - 4
==========================

உனது உயிரின்
ஒரு பிடி முயன்று - அதில்
ஒரு துகள்
தோற்றதும்
துன்பம் துடைக்க மறுத்து
துவண்டுப் போனால்
வெற்றியின் ஓரம் - நீ
ஒதுங்கவே முடியாது ..!

தோல்விகள் மட்டுமே
என்னிடம்
வெற்றி பெறும்
என்ற எண்ணம் எரி ..!!

விழிநீர் தெளிப்பதை
விரைவாய் விடுத்து
கால்கள் பதித்து
கற்றுக் கொள் ..!!
கடந்து வா
கனவைத் தேடி..!

உன் விரல்கள்
விடியல் தேடி
ஓயாமல் ஓடட்டும் ..

உன்னை உருவாக்கு
பலருக்கு உரித்தாக்கு ..!!

மனதை மெருகேற்றி
மிரண்டுப் போகாமல்
மிதந்து வா ..!
மீண்டும் மீண்டும்

மேலும்

வரவில் மிக மகிழ்ச்சி தோழி 07-Jul-2014 10:16 am
கடந்து வா கனவைத் தேடி............ வரிகள் அருமை ....... 04-Jul-2014 8:34 pm
நல்ல நலம் தோழரே.. 03-Jul-2014 11:18 am
தங்கள் வரவே மகிழ்ச்சி தோழமையே ...தாங்கள் நலமா ? 30-Jun-2014 4:19 pm
Vinothkumar.M - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2014 1:52 am

துர்நாற்றத்தால்
தூக்கி வீச முடியா
குப்பைகளை
தன்னறைலிருந்தே
தாமதமாய்
பாலிதீன் பையில்
கைது செய்து
தெரு முனையில்
சிறை வைத்தாய் ..!

அதை விடுதலை செய்து
அள்ளி செல்லும் அன்பனை
ஏளன பார்வையில்
ஏன் வைத்தாய் !!

நான்
பகலில் எல்லாம்
பழக்கடையாய்
இரவு முழுதும்
கொசு கடியில் ..!!

என்மேல்
குவித்த குப்பைகளை
குறைக்க வரும்
குணநலமே - உன்
நலத்தை காக்கும்
பொதுநலம் ..!!

அதோ
புயலின் அறிகுறி
இனி என்னோரம்
ஓடைகள் தினசரி ..!

என்னருகே
சத்தமில்லா சாக்கடைகள்
உடைந்தவுடன்
நதியை போல் நடமாடும்
அளவில்லா பாசத்தால்
அடிக்கடி ..!!

இதோ தடியுடன் ஒருவன்
சம்பள பணத

மேலும்

கவிதையின் கருவை தங்கள் அழமான கருத்தில் சொல்லி மனம் மகிழ செய்தீர் ஐயா .. சமூகம் சார்ந்த படைப்பை எழுதவே ஆசை .. ஆனால் என்ன செய்ய ஐயா ..இங்கு அதற்கான ஊக்குவிப்பு மிக குறைவே .. தங்களின் வரவில் மிகவும் மகிழ்ச்சி ஐயா ..தொடர் வருகை கிடைத்தால் நலம் 14-Jul-2014 11:16 am
அன்றாட வாழ்க்கையின் யதார்த்தங்களை அனுதாபத்துடன் சொல்லியிருக்கிறீர்கள். மற்ற குப்பைகளுடன் மனித மனக் குப்பைகளையும் பையைக் கிழித்துக் காட்டியிருக்கிறீர்கள் . இதோ தடியுடன் ஒருவன் சம்பள பணத்தை வட்டிக்கு விட்டு சாலையோர கடையில் சண்டையிட்டே கையூட்டு கேட்கிறேன் மானமில்லா மனதுடன் ..!! -----சாலையோர குப்பைகளின் சங்கமம். இந்தக் குப்பையை யார் துப்புரவு படுத்துவது.? வித்தியாசமான பார்வை., சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் இராஜ்குமார். -----அன்புடன், கவின் சாரலன் 13-Jul-2014 6:44 pm
மிகவும் நன்றி தோழமையே 27-Jun-2014 12:33 am
சிறப்பு தோழரே! 26-Jun-2014 8:23 pm
Vinothkumar.M - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 2:34 am

நான்
சாஞ்சி நிக்கும்
கதவோரம்

என்
நாணம் நவுந்து
தீவிரமா தீட்டும்
ஒத்த வெரல்
ஓவியம் ஏனோ ...??

உன்
வார்த்த செஞ்ச
வசியம் தானோ ...??

சேர்த்து வச்சுத
கொஞ்சம் கோர்த்து
தினமும் சூடி மகிழுறன் - நீ
சிதறி போன சிரிப்புகள ..!!

முகம் பாக்கும் கண்ணாடியிய
முத்தமிட்டு மொறைக்குறேன் ..!!
உன் கன்னமாச்சு கண்ணாடி
கன்னி என் கண்ணுக்கு ..!!

உன்
கன்னம் வேணா
காதும் வேணா
அந்த இதழு மேல
எட்டி பாக்கும்
ஒத்த முடி போதும்
கட்டி வச்சி
காதல் செய்ய ...!!

மொட்டாய் போன
என் முகமோ
மலர வேணும்
உன் முகம் பாத்து!

மங்கை என் மனச
மாயம் செஞ்ச கண்ணா ..!!
உன்

மேலும்

இந்த அகராதின் மொத்த அர்த்தம் அவளே .. அகராதியை அலங்கரித்து விட்டது தங்கள் கருத்து நண்பரே .. கவிதையை ரசனையுடன் படித்து கருத்து தந்ததில் மிக மகிழ்ச்சி தோழரே .. 19-Jun-2014 5:55 pm
காதலுக்கு ஒரு புது அகராதியை உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் கூறுகிறது நண்பரே, 19-Jun-2014 5:46 pm
தங்களின் முதல் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி நண்பரே 28-May-2014 3:24 pm
அருமை நண்பா 28-May-2014 3:22 pm
Vinothkumar.M - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 12:05 am

==========================
தன்னம்பிக்கை கவிதை - 3
==========================

விடிந்த பின்னும்
வீட்டில் தூங்கி
விண்ணை தொடும் கனவு ஏன் ..??

உன் தேடல்
தெரு வரை என்றால்
வாய்ப்புகள் வாசல் வருமா ..??

சோகம் என்பதில்
முத்தா உள்ளது - நீ
மூழ்கி போக ..!!

இன்னலை எடுத்து
இமை முன் வைத்து
தோலை உரித்து
தூக்கி வீசு ..!!

காலம் கற்று தரும்
வழிகளை
விரட்டி பிடித்து
விழியில் வை ..!!

பாதம் முன் நிற்கும்
பாறைகளின்
பட்டை உரித்து
படிகளாக்கு ...!!

அடுத்த பாதம்
அடி வைத்து
பயணம் செய்ய ..!!

சோம்பல் கொண்டு
நீ திரிந்தால்
உன்னுள் எறியும் தீயும் ஏமாற்றும

மேலும்

நன்றி தோழரே ! 25-May-2014 10:47 am
ஏறி செல்ல ஏணி எதற்கு ..?? எல்லா எறும்பும் சாட்சி இதற்கு ..!! சோகம் என்பதில் முத்தா உள்ளது நீ மூழ்கி போக... அருமை வரிகள்.... 25-May-2014 10:39 am
வரவிலும் கருத்திலும் மிக மகிழ்ச்சி ஐயா .. தங்கள் ஊக்கத்தால் நிச்சயம் தொடர்வேன் .. 20-May-2014 6:04 pm
நன்றாய் உள்ளது. தொடரட்டும். வாழ்த்துக்கள் 19-May-2014 10:38 am
lambaadi அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-May-2014 7:28 pm

மின்சாரம் தொலைந்த
நடுநிசியில்
காற்றுக்கென உலாவுகையில்
திடீரென தென்படும்
கரும்பூனையின்
மின்னிடும் கண்களிரண்டும்
தொலை தூர
நகம் வளர்த்து
மனப் பிராந்தியமெங்கும்
பிராண்டத்தான்
செய்கிறது
விடியும் வரை !

எல்லா ராக்களிலும்
ஏதோ ஓரிடத்தில்
திருட்டுக் கடுவன்கள்
ஆளில்லா அகம்புகுந்து
அமுதருந்திக்
கொண்டே தானிருக்கிறது !

அந்தியின் கருக்கலில்
ஈனஸ்வரத்தில்
முனங்கும்
ஒற்றைப் பூனையின்
அபஸ்வர ஓலம்
துர்ச்சகுனமாய்
யாருக்கும் பிடிக்காமலே
போகிறது
பூனைகளுக்கும் கூட !

அட்சயம் அருகிருந்தும்
சந்திர அப்பம்
தின்ன
ஆகாயம் குதித்து
காலொடிந்து -
மீண்டும்
மதில்மே

மேலும்

நன்றி தோழமையே 19-May-2014 6:17 pm
அருமை அருமை 19-May-2014 1:30 pm
வருகைக்கும் வார்த்தைகளை சிலாகித்து வாழ்த்தியமைக்கும் நன்றி தோழி 18-May-2014 7:30 pm
// தொலை தூர நகம் வளர்த்து, அட்சயம் அருகிருந்தும் சந்திர அப்பம் திண்ண, கருவாட்டுக் கனவுகளுடன், சகுனப் பாய்ச்சல்களுடன்....// அருமை....அசாதாரண வார்த்தை விளையாடல்கள்... 18-May-2014 1:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
PRIYAR

PRIYAR

coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (11)

PRIYAR

PRIYAR

coimbatore
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே