நான் காதலி ஆகணும் உன் கவிதைக்கு - இராஜ்குமார்

நான்
சாஞ்சி நிக்கும்
கதவோரம்

என்
நாணம் நவுந்து
தீவிரமா தீட்டும்
ஒத்த வெரல்
ஓவியம் ஏனோ ...??

உன்
வார்த்த செஞ்ச
வசியம் தானோ ...??

சேர்த்து வச்சுத
கொஞ்சம் கோர்த்து
தினமும் சூடி மகிழுறன் - நீ
சிதறி போன சிரிப்புகள ..!!

முகம் பாக்கும் கண்ணாடியிய
முத்தமிட்டு மொறைக்குறேன் ..!!
உன் கன்னமாச்சு கண்ணாடி
கன்னி என் கண்ணுக்கு ..!!

உன்
கன்னம் வேணா
காதும் வேணா
அந்த இதழு மேல
எட்டி பாக்கும்
ஒத்த முடி போதும்
கட்டி வச்சி
காதல் செய்ய ...!!

மொட்டாய் போன
என் முகமோ
மலர வேணும்
உன் முகம் பாத்து!

மங்கை என் மனச
மாயம் செஞ்ச கண்ணா ..!!
உன் மறுபுறம் அறிய
ஆச ஏனோ அலையுது ...!!

காத்தா போன என் காதல்
மூச்சி குழலுள
மூழ்கி கிடக்குது ..!!

சரீரம் சட்டுன்னு சாயுது - உன்
சன்னல் வழி சமிக்கையில ..!!

வரமே இல்லாம
வசிக்குறேன் - நீ
வாசித்த வார்த்தையில ..!!

இந்த சட்ட ஏன்டா போட்ட
ரண்டு கண்ண பறிச்சி புட்ட ..!!

உறவ ஒடச்சி உன்ன பாக்க ..!!
ஒத்த நிமிஷம் கூட இல்ல ..!!


நீ
நடந்து போற
நொடியில ..!
என்
மனசு நிக்குது
படியில ..!!.

தேய்ச்சி தேய்ச்சி
தேடுறன் காதல ..!!
நீ
பாதம் பதிச்ச படியில ..!!

கடந்து போற
கவிஞனே
கற்பன கொஞ்சம்
கடனா கொடு ..!!

காதலி ஆகணும் - உன்
கவிதைக்கு .....!!

-- இராஜ்குமார்

=============================================== எனது காதலியாக நான் இருந்தா இப்படி இருப்பேன் என்ற கற்பனை மட்டும் .
==============================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-May-14, 2:34 am)
பார்வை : 771

மேலே