சுட்டுப் பார் சூரியனை -- இராஜ்குமார்

==========================
தன்னம்பிக்கை கவிதை - 4
==========================

உனது உயிரின்
ஒரு பிடி முயன்று - அதில்
ஒரு துகள்
தோற்றதும்
துன்பம் துடைக்க மறுத்து
துவண்டுப் போனால்
வெற்றியின் ஓரம் - நீ
ஒதுங்கவே முடியாது ..!

தோல்விகள் மட்டுமே
என்னிடம்
வெற்றி பெறும்
என்ற எண்ணம் எரி ..!!

விழிநீர் தெளிப்பதை
விரைவாய் விடுத்து
கால்கள் பதித்து
கற்றுக் கொள் ..!!
கடந்து வா
கனவைத் தேடி..!

உன் விரல்கள்
விடியல் தேடி
ஓயாமல் ஓடட்டும் ..

உன்னை உருவாக்கு
பலருக்கு உரித்தாக்கு ..!!

மனதை மெருகேற்றி
மிரண்டுப் போகாமல்
மிதந்து வா ..!
மீண்டும் மீண்டும்
சரித்திரம் படைத்து
சாதிப்பவன் நீ ..!

அடைக்கலம் கேட்டும்
அவமானத்தை - உன்
நகங்களில் நசுக்கி - அதன்
நிழலையும் புதைத்து
வெற்றியோடு விளையாடு ..!!

இமைக்கும் இடைவெளியில்
துடைத்து விடு
தோல்விகளை ..!!

இனி
உன் உதடுகளின்
உச்சரிப்பில்
உலகம் உருவாகும் ..

சிந்தனை உயர்வை
இடறச் செய்யும்
இன்னல் மேல் வைத்து
சுட்டுப் பார்
சூரியனை ..!!

அடுத்த நொடி
அணைந்துப் போகும்
அச்சூரியன் ..!!

--இராஜ்குமார்


--தன்னம்பிக்கை கவிதைகள் தொடரும்....

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Jun-14, 1:42 am)
பார்வை : 312

மேலே