ஏற்றம் கொள்ள எந்தன் வாழ்விலே
ஏக்கம் கொண்டேன், ஏக்கம்
கொண்டேன்
ஏற்றம் கொள்ள எந்தன்
வாழ்விலே
எங்கும் கண்டேன், எங்கும்
கண்டேன், ஏதோ ஒரு
சந்தர்ப்பத்திற்காக
என்னில் கொண்டேன்,
எண்ணம் கொண்டேன்,
வெற்றியை அடைந்திடவே
ஏமாற்றங்கள், தோல்விகள்
தகர்த்திடவே
எண்ணங்கள் உறுதியானால்
பார்வைகள் கூர்மையானால்
ஏற்றங்கள் நிச்சயமே
ஏமாற்றங்கள் அலட்சியமே
ஏக்கத்தை எண்ணங்களாக
மாற்றிடு, ஏணியில் ஏறி
நிலைத்திடு