குப்பைகளின் குதூகலம் சாலையோரச் சங்கமம் - இராஜ்குமார்

துர்நாற்றத்தால்
தூக்கி வீச முடியா
குப்பைகளை
தன்னறைலிருந்தே
தாமதமாய்
பாலிதீன் பையில்
கைது செய்து
தெரு முனையில்
சிறை வைத்தாய் ..!

அதை விடுதலை செய்து
அள்ளி செல்லும் அன்பனை
ஏளன பார்வையில்
ஏன் வைத்தாய் !!

நான்
பகலில் எல்லாம்
பழக்கடையாய்
இரவு முழுதும்
கொசு கடியில் ..!!

என்மேல்
குவித்த குப்பைகளை
குறைக்க வரும்
குணநலமே - உன்
நலத்தை காக்கும்
பொதுநலம் ..!!

அதோ
புயலின் அறிகுறி
இனி என்னோரம்
ஓடைகள் தினசரி ..!

என்னருகே
சத்தமில்லா சாக்கடைகள்
உடைந்தவுடன்
நதியை போல் நடமாடும்
அளவில்லா பாசத்தால்
அடிக்கடி ..!!

இதோ தடியுடன் ஒருவன்
சம்பள பணத்தை
வட்டிக்கு விட்டு
சாலையோர கடையில்
சண்டையிட்டே
கையூட்டு கேட்கிறேன்
மானமில்லா மனதுடன் ..!!

என்னில்
தேங்கிய நீரில்
மிதந்த மின்கம்பியால்
மடிந்து போன மனிதனை
மனிதமின்றி பார்க்கும்
மாமனிதா ..!

அடிக்கடி ஆலய
உண்டியலில் உனையிட்டு
எதை தேடி செல்கிறாய்
உன் வாழ்வில் ..!!

மனிதம் இல்லா
மனிதனின்
கொடுக்க மறுக்கும்
கொள்கைகளை
ஏற்க மறுத்த
என் மனம்
எடுத்து கொடுத்தது
பல உறைவிடம்
ஏதும் இல்லா
ஏழைகளுக்கு ..!!

சம்பள உயர்விற்கு
சாலை மறியல் செய்யா
சாதனையாளர்கள் ..!!
எனை துப்புரவு செய்யும்
தூய்மையாளர்கள் ..!!

எனை
பழுதுப்பார்க்கும் பணியில்
பாதி பணம்
அரசுக்கு அவசரமாய் ..!
மிச்சமான
சில்லறையில்
சிதைந்துப் போகுது
என் சாலைகள் ..!!

இனி என்றும்
குப்பைகளின் குதூகலம்
சாலையோரச் சங்கமம் ..!!


- இராஜ்குமார்

==============================================
சாலையோரம் சொல்லும் மனிதம்
==============================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Jun-14, 1:52 am)
பார்வை : 184

மேலே