ஸ்டாக் மார்க்கெட்
ஒரு பெரிய பணக்காரன்
ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்...!!
நீங்கள் என்னிடம்
ஒரு பாம்பை பிடித்து தந்தால் எந்த வகை பாம்பாக இருந்தாலும்,
பாம்பு ஒன்றுக்கு 2000ரூபாய் தருகிறேன் என்றான்.
உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள
பாம்புக்களை எல்லாம்
பிடித்து கொடுத்து 2000
ரூபாயை வாங்கி கொண்டார்கள்.
ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும்
பிடித்துவிட்டதால்,
அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த
ஆர்வம் குறைந்து போய்விட்டது.
உடனே அந்த பணக்காரர் இப்படி
அறிவித்தார் ....!!
இப்போதும்
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு
3000ரூபாய் தருவதாக சொன்னார்.
அவர்கள் மீண்டும்
உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .
ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும்
பிடித்துவிட்டதால் ,
அதன் எண்ணிக்கை மிக மிக மிக
குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே மிக
அறியதாகி விட்டதால் ,
அதில் இருந்த
ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை.
மீண்டும் அறிவித்தார்
இப்போது 4000
ரூபாய் தருவதாக ....
உடனே ஊரில்
உள்ள மக்கள் அருகில் இருந்த
காடு மலை சென்று ஒன்று விடாமல்
பிடித்துகொடுத்தார்கள்.
இப்போது பாம்பை காண்பதே அறிதாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.
எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை.
மேலும்
பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால
15,000 ரூபாய் தருவதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல்,
தான்அவசர
அவசரமாக இன்னொரு பிஸினஸ்
விஷயமாக மற்றொரு ஊர் செல்ல
வேண்டுமென்பதால் ,
ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன்..
அதனால் உங்களால் முடிந்த
அளவு பிடித்து கொண்டுவாருங்கள்
என்று சொல்லி நான்
வரும் வரைக்கு என் உதவியாளர்
இங்கு இருப்பார்
என்று சொல்லி சென்றுவிட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு ,
இங்கே பாருங்கள்
அனைத்து பாம்புகளும் இந்த
கூண்டில் உள்ளது.
நிச்சயமாக
சொல்லுகிறேன் இந்த
ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும்
பாம்புகளே இருக்காது.
அதனால்நான்
ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான்
உங்களுக்கு10,000 ரூபாய்க்கு விற்கிறேன்.
அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல
வேண்டி இருக்கிறது
என்றுஅவருக்கு போன்
மூலம் சொல்லி சென்று விடுகிறேன்.
அவர் வந்ததும் இதே பாம்பை நீங்கள் அவரிடம்15,000
ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்"
ஒரு பாம்பு ஒன்றுக்கு 5000 ருபாய் உங்களுக்கு லாபம் கிடைக்கும்
என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில்
இருந்த பணத்தையும்,
இருந்த நகைகளையும் விற்று அந்த பணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி
குவித்தார்கள்.
எல்லாப் பாம்பையும் விற்ற அந்த
உதவியாளர்,
முதலாளி நாளை வருகிறார் .
அதனால் நான் இன்று போகிறேன்
என்று சொல்லி போய்விட்டார்.
அந்த நாளில் இருந்து
இந்த நாள் வரை
அந்த ஊர் மக்கள்
அந்த முதலாளியையும்
பார்க்கவில்லை ,
அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்.
நண்பர்களே...!
இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
ஸ்டாக் மார்க்கெட்
எப்படி செயல்படுகிறது என்று.
இப்படிதான் பலதொழில் அதிபர்கள்
பாம்புக்கு பதிலாக,
புது புது பொருட்களையும்
திட்டங்களை கூறியும்
மக்களை ஸ்டாக் மார்க்கெட்டில்
ஏமாற்றிவருகிறார்கள்.
இப்ப சொல்லுங்க...
நீங்க
ஏமாந்தவர்களில் ஒருவரா...?
அல்லது இதை படித்தும்,
வருங்காலத்தில் ஏமாறக்கூடிய
ஆட்களில் ஒருவரா....?