சந்திக்கும்முன்... சந்தித்தபின்
அழகை கண்டேன்!
என் விழித்தானா என்று
நான் ஏங்கும் அளவிற்கு...
என் விழிகளில் ஈரம் இல்லை
உன்னை காணும்முன்...
என் விழிகளில் நீர்கோவை
உன்னை கண்டபின்...
பட்டமரமாய் நான் இருந்தேன்
உன்னை பார்க்கும்முன்...
பசுமைவனமாய் மாறிவிட்டேன்
உன்னை பார்த்தபின்...
அழுக்கு ஆடை உடுத்தினேன்
நீ வரும்முன்...
வண்ண ஆடை மாற்றினேன்
நீ வந்தபின்...
ஏன் இந்த பிறவி என்று நினைத்தேன்
உன்னை நினைக்கும்முன்...
பிறந்ததின் பலன் அறிந்தேன்...
உன்னை நினைத்தபின்...
கடுகளவும் காதல் இல்லை
உன்னை சந்திக்கும்முன்...
கடலளவு காதல்கொண்டேன்
உன்னை சந்தித்தபின்...
என் முழுமனதோடு
ஒரு மலரோடு...
என் இதழின் மெய்
வார்த்தைக்கலோடு...
என் காதலை உன்
பாதத்தில் வைக்கிறேன்...
உன்பாதையில் என்னை
ஏற்றிக் கொல்லாதே...
என்னை ஏற்றுக்கொள்
என்று வேண்டிக்கொள்கிறேன்ன்...