அழகு
பார்வையும் சிரிப்பும் மனதை மயக்கும்
அன்புச் சொற்கள் இதமாய் இருக்கும்
மெல்ல நடக்க உள்ளம் உருகும்
சின்னப் பூவால் குடும்பம் மகிழும்
சுவற்றுக் கிறுக்கல் ஓவியம் ஆகும்
கிழிந்த தாள்கள் பறவைகள் ஆகும்
பாச பொம்மைகள் தாலாட்டுப் பாடும்
அழகு பாப்பாவால் சோகங்கள் ஓடும்

