விடியல்
இரவுப்பெண் விழித்து எழ
வெள்ளிப்பூச்சு அடித்ததேன் சூரியன்?
நிழல் நண்பன் பிறப்பெடுக்க
அஸ்திவாரம் அமைத்ததேன் சூரியன்?
நிலவுத்தோழி மறைந்து போக
வெளிச்சவண்ணம் தீட்டியதேன் சூரியன்?
சேவல் எல்லாம் உரத்துக்கூவ
பயமுறுத்தி விட்டதேன் சூரியன்?
கைகளேந்தி நிற்கும் மனிதர்
மாற்றமேதும் காணவில்லை..
உரிமை கேட்டும் அடிமைவாழ்வால்
ஒருசாராருக்கு இன்பமில்லை..
பரிந்து பேசா ஆட்சியிருக்க
பிச்சைநிலைக்கு சிலரின் வாழ்வு
அறிந்துமுதவா மனிதரிருக்க
விடியலிவர்க்கு என்று உண்டோ?
இரவு உண்டு உறக்கம் இல்லை
பசியும் உண்டு உணவு இல்லை
உறவு உண்டு உதவி இல்லை
மனிதர் உண்டு மனிதம் இல்லை
துன்பம் உண்டு இரக்கம் இல்லை
சோர்வு உண்டு அன்பு இல்லை
உலகம் உண்டு வாழ்வு இல்லை
எல்லாம் உண்டு விடியல் இல்லை