ஓர் அனாதையின் அழுகுரல்
தாயில்லை எனக்கு ....
அதனால்
தந்தையை தெரியவில்லை ......
அழுது கிடந்தேன்
அரசு தொட்டிலில்......
புரண்டு கிடந்தேன்
வெறும் தரையில் .....
அள்ளி அணைத்த கரங்களுக்குள்
என் தாயின் வாசம் இல்லை ......
சோறுண்ண வாய் திறந்தேன்
அள்ளி தர யாருமில்லை........
பசித்திருந்தேன் பல நாளும் ....
விழித்திருந்தேன் பல இரவும் .....
துள்ளித் திரிய வலிமையில்லை ....
தூக்கித் திரிய யாருமில்லை ......
மழலை மொழி கேட்க
செவியில்லை.......
மடியினில் தாலாட்ட
மனமில்லை .......
இருளில் பயணிக்கிறேன் நெடுந்தூரம் ......
இறைவன் படைக்கிறான்
இப்படியும் சில மனிதர்களை !!!!!!.......