சட்டம் யார் கையில்
சுயநலம் இல்லாதவர்கள் கையில்
சுதந்திரம் இருந்தால் - சட்டம் அவர்கள் கையில்.
நிலங்களின் உரிமையாளர்களுக்கு
நெருக்கடித் தராதவர்கள் இருந்தால் - சட்டம் அவர்கள் கையில்.
மாநிலங்களின் உரிமைகளில்
தலைஈடு இல்லாதிருந்தால் - சட்டம் அவர்கள் கையில்.
சட்டமே - நீ யார் கையில்.
சட்டம் ஒழுங்கை சீர் தூக்குபவர்கள் இருந்தால்
சட்டம் அவர்கள் கையில்.
சுயநலம் இல்லாதவர்கள் உள்ளார்களா?
நிலங்களை அபகரிக்காதவர்கள் உள்ளார்களா?
மாநில உரிமைகளில் தலையீடு இல்லாமல் உள்ளார்களா?
சட்டமே - நீ யார் கையில் உள்ளாய்?
சட்டம் ஒழுங்கை சீர்தூக்குபவர்கள் உள்ளார்களா?
சட்டமே - நீ யார் கையில்.