வேண்டும்வேண்டும்

மனிதா!!
நம் வாழ்வில்...

'அ'ன்பான 'அ'ரவணைப்பு
வேண்டும்

'ஆ'றுதலான 'ஆ'தரவு
வேண்டும்

'இ'னிமையான 'இ'ன்னிசை வேண்டும்

எதிலும் 'ஈ'டுஇணையில்லா
'ஈ'டுபாடு வேண்டும்

'உ'ன்னதமான 'உ'ணர்வுகள்
வேண்டும்

'ஊ'னம்(மனதில்) கொள்ளாதிருக்க
'ஊ'க்கம் வேண்டும்

'எ'ளிமையான 'எ'ண்ணங்கள்
வேண்டும்

'ஏ'ழ்மை வென்றெடுக்க 'ஏ'ர்த்தொழில் வேண்டும்

'ஐ'யத்தை வென்றெடுக்கும்
'ஐ'ம்புலன்கள் வேண்டும்

'ஒ'ன்றாதாரோடு 'ஒ'ன்றுபட
வேண்டும்

'ஓ'ங்கி உரைக்கும் 'ஓ'ர்மை
வேண்டும்

'ஔ'வைதாயின் வீரகுணம் வேண்டும்
'ஔ'விதம் கொள்ளாத தூயமனம் வேண்டும்

இறுதியாக...

வெ'ஃ'காமை குணம் வேண்டும்
வெ'ஃ'கல் படியாத மனமே
வேண்டும்


ஓர்மை---துணிவு
வெஃகல்---பேராசை

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (30-Dec-17, 9:23 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 127

மேலே