2018 பூமகளே வருக வருக

2018
பூமகளே வருக வருக
வசந்தமும் வளமையும்
மங்காமல் செழிக்க
உன் பொற்பாதங்களை
இந்த பூமியிலே பதிக்க
உனை வாழ்த்தி வரவேற்கிறோம்...

மலர்களே
தேவதைகளின் ஆசிர்வாதத்தல்
இந்த பூமிக்கு 2018 எனும் பூமகள்
விஜயம் செய்யப்போகிறாள்
அவளை வாழ்த்தி வரவேற்போம்...

இந்த பூமியின்
இயற்கை வளங்கள்
நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு விவசாயம் செழித்து வளர்ந்து மக்களும் கால்நடைகளும்
மகிழ்ச்சியோட வாழ
அவளை வாழ்த்தி வரவேற்போம்...

இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
என்ற பேதங்களை அகற்றி
எல்லோரும் ஒன்று என்ற
சகோதரத்துவத்தை
போற்றி பேணி பாதுகாக்க
அவளை வாழ்த்தி வரவேற்போம்...

யான் பெற்ற இன்பம்
இவ்வையைம் பெறட்டும்
என்ற நல்லெண்ணம்
எல்லோர் மனதிலும்
ஒலிக்கவைக்க
2018 எனும் பூமகளை
வாழ்த்தி வரவேற்போம்...

அனாதை இல்லங்கள்
முதியோர் இல்லங்கள்
படி படியாக குறைக்கப்பட்டு
குடும்பங்களில் அன்பும்
அரவணைப்பும் பெருக
2018 எனும் பூமகளை
வாழ்த்தி வரவேற்போம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Dec-17, 10:00 pm)
பார்வை : 157

மேலே