பகல் பத்து பதிகம் 1
பதிகம் ௧
மெய்தூண்ட, மனந்தாண்ட
மிதமானான் பலசெயலில்.
தீவிரமானான் அவள் நினைவில்.
அவன் திசையை
அவள் தீர்மானித்தாள்;
அவளும் அறியாமலே.
அசுர வாழ்வின் சுரபேதங்கள்
அறியும் அறிவை
வாழ்வின் தடங்கள் அல்லவா
அறிமுகப் படுத்தும்.
அவன் தொடர்வதை
அவன் அறிவான்
சிலர் அறிவார்
அவள் அறியாள்.
இவள் தான் என்பதை
எது தீர்மானித்தது?
அருகாமை என்பதும்
(வயதின்) பருவத் தேவையும்.
கண்கள் சிவந்தன
உறக்கம் தொலைந்ததால்...