பகல் பத்து பதிகம் 2

பதிகம் 2


தீர்மானங்களும், இலக்குகளும்
இட்டுச் செல்லும் முயற்சிகளும்
முடிவு என்னும் முட்டுச்சந்தில்
முட்டி நிற்கும்.

முடிவை நோக்கி நாமும் நகரலாம்
நம்மை நோக்கி முடிவும் நகரலாம்.
சாதக பாதகம் இரண்டிலும் உண்டு.

கரைவரும் கப்பல்
தரை தட்டியதும் உண்டு.
நம்பிக்கை தானே
நகர்த்திக் கொண்டிருக்கிறது.

மொட்டுக்கள் மலராமல்
போகுமா என்ன?

கதவுகள் திறக்காமல்
போகுமா என்ன?

வாழ்க்கை
வளங்களை மட்டுமே
யாசித்துக் கிடக்கிறது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Dec-17, 10:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 37

மேலே