பகல் பத்து பதிகம் 3
பதிகம் 3
சிலுவையில் அறையப்படுவதையும்
முள்படுக்கையில் படுப்பதையும்,
ஏன்
கரடு முரடான பாதையில் நடக்கவும்
கனவும், கற்பனையும்
காண்பவன் உண்டா?
இடைமறிக்கும் மூளையை
மனம் புறந்தள்ளுகிறது.
இன்றைய ஆசை,
இன்றையத் தேவை;
ஒளியும் மன உணர்வை
உடலின் தகிப்பை
அறியாப் பிள்ளையாய்
துரத்தும் வெளிமனம்.
உயிர்த் தொடர்ச்சி
தள்ளி விடுகிறது
நீச்சல் பழகென்று.
ஏதோ ஒருகுரல்
மணிஎன ஒலிக்கிறது.
இரவுகளை
வெறிக்க வைக்கிறது.