பகல் பத்து பதிகம் 4

பதிகம் 4

மனிதர்களின் ஆறுமாதம்
தேவர்களின் பகல்பத்துத்தான்.

தேவதை பின்தொடர் தேவன்
பகல்கள் பறக்கின்றன,
பஞ்சவர்ணக் குதிரையாய்.
நெஞ்சவர்ணம், நினைத்தவர்ணம்,
நினைத்த வண்ணம்
நீள்கிறது.

நினைத்த வண்ணம்
நிறைவேற
தொடர்ந்து என்னபயன்
தொடர்பு கொள்ளல் வேண்டாமா?

பிறகு யாரும் தடுக்கலாம்
பெண்ணே மறுக்கலாம்.
ஆசையின் முன்னே
அச்சம் தடுக்கிறது.

இதுவரை பார்க்கவில்லை
அப்புறம் அல்லவா,
பார்த்தும் பார்க்காமல்
போவதற்கு?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Dec-17, 10:07 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 24

மேலே