பகல் பத்து பதிகம் 5

பதிகம் 5

திரும்பியும் பார்க்கவில்லை
விரும்பியும் பார்க்கவில்லை
விரும்பாமலும் பார்க்கவில்லை.

இராப் பத்தை நெருங்குகிறது காலம்.
மார்கழி மலர்கிறது,
வசந்தம் வருகிறது.

அவள் பார்வை கேள்வி கேட்டது.
இரண்டு சொட்டுக் கண்ணீரோடு
போய்விடு என்றது
புத்தி சொன்னது.

வாழ்க்கை என்பதில்
வருத்திக் கொள்ளலாம்
திருத்திக் கொள்ளலாம்.
வாழ்க்கை என்பது
வாழ்வது; சாவதல்ல.

போதையில்
பேதை ஆகிறான்
பேசிவிட்டால்
ஒத்துக் கொள்வாள் என்று
ஓடத் தொடங்கியது மனம்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Dec-17, 10:10 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 38

மேலே