முற்றில்லா அழகு
முடிவிலா வானம்தனில் முழுநிலவுப்
பதியவிடில் அது முழுமைப் பெறா..!
அதுப் போல் முற்றுறில்லா நின்னழகிற்கு
பொட்டுயில்லாவிடில் முழுமை பெறா...!
வாளேந்திய வீரனுடன் வில்லில்
நாணேற்றிய வீரன் சமரிட்டு வாகைச் சூட..!
அதுப்போல் காகிதமேந்திய எனை
உந்தன் இமைவில்லில் நின்னழகை நாணேற்றி சமரிட்டு வாகைச்சூடியது ஏனடி..!