இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வச்சு செஞ்சவனெல்லாம்
வக்கணையாதான் வாழுறான்..
வாங்கி வச்சவன் தான்
வெறும் கையோடு நிக்குறான்!

சனி பெயர்ச்சியோ?
குரு பெயர்ச்சியோ?
ஒன்னும் சொல்லிக்கிற மாறி இல்ல..

நிகழ்வுகள்-
விவசாயிகளின் போராட்டம்,
வேலைக்காரியின் சிறைவாசம்,
நீட் தேர்வின் அவலம்,
தொலைந்துப் போன மீனவர்கள்..
ஒருபுறம் மனசை கசக்க.

சைக்கிள் கேப்பில் மினி லாரி
ஓட்டிய சகலகலாவல்லவன்,
மேட்சில் லாஸ்ட் பாலில்
சிக்ஸர் அடிப்பாருனு பாத்தா?
பல சமயம்..
பல்டி அடிச்சு டக் அவுட் ஆன தலைவர்,
குதுகுலமா கும்மி அடிச்ச
பிக்பாஸ் கூட்டம்..
இப்படி மறுபுறம் திகைக்க..

டிசம்பர் மாதம் வராத புயலை
விமர்சனம் செய்த
நம்ம..
வந்து தெரிக்க விட்டிடுப் போன
'ஒக்கிப்' புயலை
தவற விட்டோம்..

கருத்து-
தொலைந்து போச்சின்னு
தேடினது எதுவும் உங்கல
விட்டுப் போகது..
தொலைச்சிடனும்னு யோசிச்ச
விஷயம் எதுவும் உங்க
மனச விட்டு நீங்கது..
நிலையில்லாத இந்த
உலகத்தில நிறந்திறமான
நிகழ்வுனு எதுவுமில்ல..

பகுத்தறிவு-
நாள்காட்டியில் பக்கங்களை
கிழிக்கிற பழகத்த
வச்சிருப்பவங்களுக்கு இது
"புது வருடம்"..
எல்லா நாளும்
கிழி கிழினு கிழிச்செடுத்த
நமக்கு என்னத்த பெருசா
தோனப் போகுது..

மண் புழுவாய் மக்கி
கிடப்பதில் தவறில்லை..
அடித்தவர் நிம்மதியை
அழிக்கும்
முதுகெலும்பில்லத
கரையான் பூச்சிகள் மீது
காறி உமிழ்ந்து விட்டு
உன் அடுத்த
காரியத்தில் கண்ணாயிரு..
புன்னகையுடன் பிறக்கும்
ஒவ்வொரு நாளும்
புத்தாண்டே!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (1-Jan-18, 11:01 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 205

மேலே