ஜவ்வு மிட்டாய்

ஜல்ஜல்ஜல் என்றுபொம்மை கைதட்டும் ஓசை
***ஜவ்வுமிட்டாய் தானன்று குழந்தைகளின் ஆசை!
நல்லழகு வண்ணத்தில் வரிவரியாய் இருக்கும்
***நாக்கினிலே ஒட்டினாலும் கரைந்ததுவும் இனிக்கும்!
பல்வடிவில் செய்தசத்தும் விற்பவரைக் கண்டால்
***பாலருடன் வாங்கநிற்கும் பெரியோரும் உண்டே!
இல்லையின்று பொம்மைமிட்டாய் முன்னாள்போல் இங்கே
***ஏக்கமொன்று மனத்தோரம் இனிசுவைப்ப தெங்கே??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jan-18, 10:34 pm)
பார்வை : 193

மேலே