சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 6 சாந்தமு லேக சௌக் யமு லேது – ராகம் சாமா

பல்லவி:

சாந்தமு லேக சௌக் யமு லேது
ஸாரஸத ள நயந (சாந்தமு)

அனுபல்லவி:

தா ந்துநிகைந வேதா ந்துநிகைந (சாந்தமு)

சரணம்:

தா ர ஸுதுலு த ந தா ந்யமு லுண்டி ந
ஸாரெகு ஜப தப ஸம்பத க ல்கி ந (சாந்தமு)

யாகா தி கர்மமு லந்நியு ஜேஸி ந
பா கு க ஸகல ஹ்ருத் பா வமு தெலிஸிந (சாந்தமு)

ஆக ம சாஸ்த்ரமு லந்நியு ஜதி விந
பா க வதுல நுசு பா கு க பே ரைந (சாந்தமு)

ராஜாதி ராஜ ஸ்ரீராக வ த்யாக
ராஜவிநுத ஸாது ரட்சக தநகுப (சாந்தமு)

பொருளுரை:

கமலக் கண்ணனே! இந்திரியங்களை வென்றவர்க்காயினும்,
வேதாந்திகளுக்காயினும் சாந்தம் (அமைதி) இல்லாவிடில் சுகம் இல்லை.

மனைவி, மக்கள், செல்வம் முதலியன இருந்தாலும்,
சதா ஜபம், தவம் முதலியன செய்யும் பேறு படைத்தாலும்,

யாகம் முதலிய சடங்களனைத்தும் செய்தாலும்,
சகல உள்ளக் கருத்துக்களை அறிந்தாலும்,

வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றாலும்,
பாகவதர்களென்று நற்பெயர் எடுத்தாலும்,

ஒருவனுக்கு மன அமைதி இல்லாவிடில் சுகம் கிடைக்காது.
ராஜாதிராஜனே! இராகவனே! சாதுக்களைக் காப்பவனே!

யு ட்யூபில் D.K.பட்டம்மாள், நித்யஸ்ரீ மகாதேவன், சஞ்சய் சுப்பிரமணியன் ஆகியோர் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-18, 7:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 174

சிறந்த கட்டுரைகள்

மேலே